Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

மகளிர் சுய உதவிக்குழு மூலம் மாநகராட்சிகளில் "டாய் லைப்ரரி' பட்டியல் தயாரிக்கிறது அரசு

Print PDF

தினமலர்              14.12.2010

மகளிர் சுய உதவிக்குழு மூலம் மாநகராட்சிகளில் "டாய் லைப்ரரி' பட்டியல் தயாரிக்கிறது அரசு

சேலம்: தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு தையற் கலை பயிற்சி, அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு, புடவைகளுக்கு ஜரிகை பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தவிர, வங்கிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி தனிநபர் மற்றும் குழு கடன் கிடைக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்றவர்கள் பண்டிகை கால ஸ்வீட் தயாரிப்பு, ஹோட்டல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்டு வேர் பயிற்சி, மொபைல் சர்வீஸ், ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி ஆகிய பயிற்சிகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மாநகராட்சி பகுதிகளில் குழந்தைகளுக்கான, "டாய் லைப்ரரி'(பொம்மை நூலகம்) சிஸ்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. சேலம், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் விருப்பம் உள்ள சுய உதவிக்குழுவினர் பட்டியலை சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"டாய் லைப்ரரி'யில் குழந்தைகளின் அறிவு திறனை ஊக்கும்விக்கும் வகையிலான அனைத்து விளையாட்டு உபகரணங்களும் இடம்பெறும். டாய் லைப்ரரியில் மாநகராட்சி சார்பில் நிர்ணயம் செய்யப்படும் கட்டணத்தை செலுத்தி பெற்றோர்கள் உறுப்பினராகலாம். மூன்று வயதில் இருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகள் டாய் லைப்ரரியை பயன்படுத்தி கொள்ளலாம். டாய் லைப்ரரியை தொடர்ந்து மொபைல் லைப்ரரி சிஸ்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய மாநகராட்சி வாகனங்கள் மூலம் அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒரு வகுப்பறை நேரம்(45 நிமிடம்) மாணவர்களின் பயன்பாட்டுக்கு விடப்படும். குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் அறிவு திறனை மேம்பட செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம் பகுதியிலும், இட்டேரி ரோடு பகுதியிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு சில சுய உதவிக்குழுக்கள் டாய் லைப்ரரியை பராமரிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. எனவே, விரைவில் சேலத்தில் டாய் லைப்ரரி சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாநகராட்சி பெண்கள் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்

Print PDF

தினகரன்                10.12.2010

மாநகராட்சி பெண்கள் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்

மதுரை, டிச.10: மதுரை மாநகராட்சி 5 பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தனியார் அறக்கட்டளை மூலம் ஒரு ரூபாய் நாப்கின் இயந்திரம் விரைவில் வைக்கப்படவுள்ளதாக ஆணையாளர் செபாஸ்டின் கூறினார்.

அவர் தெரிவித்ததாவது: மதுரையில், ஈவே.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரி பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 5 மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவிகளுக்கான நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட உள்ளது.

இயந்திரத்தில் மாணவிகள் ஒரு ரூபாய் செலுத்தி நாப்கினை பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்திலேயே முதல்கட்டமாக மதுரை மாநகராட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை பராமரிப்பு செய்ய ஊனமுற்றோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

ரூ. 9.80 லட்சம் மகப்பேறு நிதியுதவி

Print PDF

தினமணி       09.12.2010

ரூ. 9.80 லட்சம் மகப்பேறு நிதியுதவி

துறையூர், டிச. 8: துறையூர் நகராட்சி அலுவலகத்தில் 161 பேருக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 9.80 லட்சம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பூபதி செல்லதுரை தலைமை வகித்தார். துணைத் தலைவர் க. மகாராஜன், துறையூர் ஒன்றிய திமுக செயலர் மு. வாசுதேவன், ஆணையர் (பொ) ஜி. ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் பி. குமார், சுகாதார ஆய்வாளர் கே. குமார், அலுவலகக் கணக்கர் ரத்தினப்பா ஆகியோர் முன்னிலை வகித்தார்.திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் ந. குணசீலன், 161 பேருக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 9.80 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 


Page 9 of 41