Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு

Print PDF

தினகரன் 08.10.2010

பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு

மும்பை,அக்.8:மும்பை மாநகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையை 180 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு தற்போது மகப்பேறு விடுமுறையாக 90 நாட்கள் வழங்கப்படுகிறது. இதனை 180 நாட்களாக அதிகரிக்கும் படி ஏற்கனவே மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அதனை இன்னும் அமல்படுத்தவில்லை. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நேற்று விசாரணைக்கு வந்த போது மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை நாட்களை 180 நாட்களாக அதிகரிக்கும் சட்டதிருத்தத்திற்கு ஏற்கனவே மாநகராட்சியின் சட்டக்கமிட்டி மற்றும் நிலைக்குழு ஒப்புதல் அளித்து விட்டது. 14ம் தேதி மாநகராட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்த பிறகு, இத்திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, மாநில அரசு இத்திட்டத்தை 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியே நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டும் ஏன் அதனை நிறைவேற்ற இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டது என்பதை தெரிவிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாநகராட்சியின் இந்த முடிவால் இனி மாநகராட்சியில் பணியாற்றும் பெண்களுக்கு 180 மகப்பேறு விடுமுறை நாட்கள் கிடைக்கும். இதனால் அவர்களால் குழந்தையை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

புனே மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு திருவனந்தபுரத்தில் பயிற்சி

Print PDF

தினகரன் 30.09.2010

புனே மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு திருவனந்தபுரத்தில் பயிற்சி

புனே,செப்.30: புனே மாநகராட்சி பெண் கவுன்சிலர்கள் திருவனந்தபுரத்தில் நடக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் அகில இந்திய உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள புனேயில் இருந்து பெண் கவுன்சிலர்கள் கேரளா செல்கின்றனர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதோடு அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் நேரில் ஆய்வு செய்கின்றனர். இதற்காக புனே மாநகராட்சி நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. இதற்கு மாநகராட்சி நிலைக்குழுவும் ஒப்புதல் கொடுத்துள்ளது.

ஆனால் இது போல் படிப்பு தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் கவுன்சிலர்கள் வந்த பிறகு என்ன கற்றுக்கொண்டனர் என்பது தொடர்பாக அறிக்கை எதையும் தாக்கல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனவே இப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றமும் கடந்த 2008ம் ஆண்டு இது போன்ற படிப்பு தொடர்பான பயணத்திற்கு விதிமுறைகளை வகுக்கும் படி கேட்டுக்கொண்டது. ஆனால் இது வரை அரசு அது போன்ற விதிமுறைகள் எதையும் வகுக்கவில்லை என்பது குறிப்பிட்டதக்கது.

 

தீயணைப்பு படைக்கு பெண்களை தேர்வு செய்ய மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன் 17.09.2010

தீயணைப்பு படைக்கு பெண்களை தேர்வு செய்ய மாநகராட்சி திட்டம்

மும்பை, செப்.17: தீயணைப்பு படையில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள் ளது. இதற்கான கொள்கை ஒன்றை இறுதி செய்யும் நடவடிக்கையில் மாநக ராட்சி தீவிரமாக ஈடுபட்டு வரு கிறது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் இது பற்றி கூறு கையில், "புதிய கொள்கைக்கு மாநகராட்சி கமிஷனர் சுவா தீன் ஷத்திரியா ஒப்புதல் அளித்ததும் அடுத்த மூன்று மாதத்தில் தீயணைப்பு படைக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுவர். பெண்களு க்கு 10 முதல் 30 சதவீதம் வரை இடஒதுக்கீடு செய்யப் படும்Ó என்றார்.

இந்த ஆண்டு துவக் கத்தில் பைகுலாவில் உள்ள தீயணைப்பு படை தலைமைய கத்தில் நடந்த ஆண்டு விழாவின் போது, ஷத்தி ரியாவும் மேயர் ஸ்ரத்தா ஜாத வும் இந்த திட்டத்துக்கு ஆத ரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் இந்த திட் டம் பற்றி குறிப் பிடுகையில், "தீயணைப்பு இலாகாவில் உள்ள 120 காலிடங்களை மாநகராட்சி இந்த ஆண்டு இறுதியில் நிரப்பவிருக்கிறது. பெண்களுக்கான இடஒதுக் கீடு அந்த சமயத்தில் அமல் படுத்தப்படும். பெண் தீயணைப்பு ஊழி யர்களின் முதல் குழு அப் போது பதவியேற்கும் என்றார்.

தீயணைப்பு படைக்கு பெண் ஊழி யர்களை சேர்த் துக் கொள்வதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இருப்பதாகவும் இதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூடுதல் மாநகராட்சி கமிஷனர் மணீஷா மாய்ஸ்கர் தெரி வித்தார்.

 


Page 14 of 41