Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

அறந்தாங்கியில் 109 பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி

Print PDF

தினகரன் 02.09.2010

அறந்தாங்கியில் 109 பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி

அறந்தாங்கி, செப். 2: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 109 பெண்களுக்கு உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

அறந்தாங்கி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 109 பெண்களுக்கு தலா ரூ.6,000 வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் காசோலையை நகராட்சி தலைவர் மாரியப்பன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

அறந்தாங்கி சுகாதார ஆய்வாளர் சங்கரசபாபதி, மேலாளர் ரவிசந்திரன், எழுத்தர் சுப்பிரமணி, நகராட்சி உறுப்பினர்கள் சுமதிசங்கர், கைலாசம், ராஜம்மாள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அறந்தாங்கி நகராட்சிக்கு உள்பட 684 பயனாளிக்கு ரூ.32 லட்சம் மகப்பேறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

 

மகளிர் திட்ட செயல்பாடு கள ஆய்வு

Print PDF

தினகரன் 02.09.2010

மகளிர் திட்ட செயல்பாடு கள ஆய்வு

திண்டுக்கல் செப். 2: திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்து சென்னை மகளிர்நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் கோபால் களஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிபட்டியில் பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிராமச்சந்தை பணியை ஆய்வு செய்தார். ஆத்தூர் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் செயல்படும் மகளிர் சுயஉதவி குழுக்கள், திடக்கழிவு மேலாண்மை பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மறு உபயோகப் பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

பின்பு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகையில், ``மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அதே போல் கடனை திரும்பச் செலுத்துவதில் சுயஉதவிக் குழுக்களும் அக்கறை காட்ட வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் கலெக்டர் வள்ளலார் மகளிர் திட்ட அலுவலர் பிரேமா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்மணி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளளர் அர்ஜூன் முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாணவியருக்கு ரத்தசோகை கண்டறியும் முகாம்

Print PDF

தினமணி 30.08.2010

மாணவியருக்கு ரத்தசோகை கண்டறியும் முகாம்

வந்தவாசி, ஆக. 28: வந்தவாசி நகராட்சி சார்பில் ரத்தசோகை கண்டறிதல் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவியர் 250 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வந்தவாசி நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் உசேன் பாரூக் மன்னர் முகாமை தொடங்கி வைத்தார். வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த பரிசோதனை, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

நகராட்சி பொறியாளர் மகாதேவன், பள்ளித் தலைமை ஆசிரியர் பால சரவணன், சமுதாய அமைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 15 of 41