Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.62 லட்சம் சுழல்நிதி

Print PDF
தினமணி        12.04.2013

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.62 லட்சம் சுழல்நிதி


திண்டிவனம் நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியை நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் புதன்கிழமை வழங்கினார்.

பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ், திண்டிவனம் நகராட்சியில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2012-2013ம் ஆண்டிற்கு முதிர்வின் அடிப்படையில்  8 குழுக்களுக்கு 1 லட்சத்து 62 ஆயிரத்து 178 ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்பட்டது.  திண்டிவனம் நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் குழுக்களுக்கு சுழல் நிதிக்கான காசோலைகளை வழங்கினார். ஆணையர் எஸ்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை வரவேற்றார். ஏற்பாடுகளை சமுதாய அமைப்பாளர் ஜெயஸ்ரீபிரபா செய்திருந்தார்.
 

ஏப்ரல் 15 முதல் பெண்களுக்கு கருத்தடை முகாம்

Print PDF

தினமணி                 10.04.2013

ஏப்ரல் 15 முதல் பெண்களுக்கு கருத்தடை முகாம்


சென்னை மாநகராட்சி சார்பில் இடைவெளிக்கால பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இடைவெளிக்கால பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டாக்டர் ஆர்.கே. நகர், சஞ்சீவராயன்பேட்டை, புளியந்தோப்பு, அயனாவரம், செனாய் நகர், மீர்சாகிப்பேட்டை, பெருமாள்பேட்டை, வடபழனி, சைதாப்பேட்டை மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் உள்ள 24 மணி நேர பிரசவ மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இந்த அறுவை சிகிச்சை மாதவிடாய் வந்த 7 நாள்களுக்குள் செய்யவேண்டும்

இதில் கருவுற்று 12 வாரத்துக்குள் கருக்கலைப்புடன்கூடிய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். கருத்தடை செய்பவர்களுக்கு ரூ. 600 ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன், முதலில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் 110 பேருக்கு குடைகள் வழங்கப்படும்.

கருத்தடை செய்துகொள்ள விரும்புபவர்கள் 9445190711, 9445190720, 9445190722, 9445190723, 9445194931, 9445194935 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பூரில் சேவ் மகளிர் மாநாடு: பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் மேயர் ஏ.விசாலாட்சி பேச்சு

Print PDF
தினத்தந்தி        05.04.2013

திருப்பூரில் சேவ் மகளிர் மாநாடு: பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் மேயர் ஏ.விசாலாட்சி பேச்சு


திருப்பூரில் சேவ் அமைப்பு சார்பில் நடந்த மகளிர் மாநாட்டில் பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் என்று மேயர் ஏ.விசாலாட்சி பேசினார்.

மேயர் ஏ.விசாலாட்சி

திருப்பூர் சேவ் அமைப்பு, வட்டார மகளிர் கூட்டமைப்பு சார்பில் “தொழில்வளம் பெருக்குவதில் மகளிரின் பங்கு“என்ற தலைப்பில் மக ளிர் மாநாடு திருப்பூர் வேலா யுதசாமி கல்யாண மண்டபத் தில் நேற்று நடந்தது.மாநாட் டுக்கு சேவ் இயக்குனர் அலோ சியஸ் தலைமை தாங்கினார். மகளிர் குழு நிர்வாகி ரோஸ் லின் தங்கம் வரவேற்று பேசி னார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் மேயர் ஏ.விசாலாட்சி சிறப் புரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியத்துவம் அளித்து வருகிற தமிழக முதல்-அமைச் சர் ஜெயலலிதாவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

முற்காலத்தில் பெண்களின் தலைமையில் தான் இந்த சமூகம் இயங்கியது.அன்றைய பெண்களுக்கு நீர்நிலைகளில் நீந்த தெரியும்.உயர்ந்த மரங்களில் ஏற தெரி யும். வேட்டையாட தெரி யும். போராட தெரியும்.இப்படி அவர்கள் ஆதிகாலத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந் தார்கள்.பின்னர் பெண்களின் சக்தி குறைந்தது.

வணங்கப்பட வேண்டியவர்கள்

இப்போது மீண்டும் பெண் களின் தலைமை தலை தூக்க தொடங்கி உள்ளது.இன்றைய பெண்கள் ஆண்களுக்கு சமமாக அத்தனை வேலை களையும் செய்கிறார்கள். பல் வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார் கள். கல்வி, வேலைவாய்ப்புகள், சுய தொழில்,அரசியல், பொரு ளாதாரம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் முன் னேறி உள்ளனர்.

தோட்டத்து வண்டுகளாக மட்டும் இல்லாமல் துப்பாக்கி குண்டுகளாகவும் இருப்போம் என்று கூறுமளவுக்கு பெண் கள் மேம்பாடு அடைந்துள் ளார்கள்.2 இடங்களில் தான் கருவறை அமைந்துள்ளது. ஒன்று நாம் வணங்கும் ஆண்டவன் உள்ள கோவில் கருவறை. இன்னொன்று தாய் மார்களாகிய பெண்களிடத் தில் உள்ள கருவறை.ஆகவே பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். வாழ்த் தப்பட வேண்டியவர்கள். சமு தாயம் இன்று பெண்களாகிய நம்மை வணங்கவும் வாழ்த்த வும் தயாராக இருக்கிறது. இவ்வாறு மேயர் ஏ.விசாலாட்சி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த மாநாட்டில் கூட் டமைப்பு பொறுப்பாளர் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் நாகபிரபா, இணைப்பதிவாளர் ராமகிருஷ் ணன், நபார்டு பொது மேலா ளர் ஸ்ரீராம், கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் தியாகராஜன், முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால், குப்புசாமி தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 3 of 41