Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

பேரூராட்சி பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போருக்கு தொழில் பயிற்சி

Print PDF

தினகரன்                    09.11.2010

பேரூராட்சி பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போருக்கு தொழில் பயிற்சி

சிவகங்கை, நவ. 9: பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போருக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தெய்வநாயகம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 பேரூராட்சிகளில் சுவர்ணதாரி ரோஜ்கார் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டுகிறது. இத்திட்டத்தில் 104 பேருக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.8.76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 2007ம் ஆண்டு இறுதி செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பயிற்சிக்கு கல்வி தகுதி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தற்போது உள்ள கல்வி தகுதி அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 18 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குழுட்டத்தில் பயிற்சிக்கான நிறுவனம் மற்றும் பயிற்சிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.

பயிற்சிகளின் விவரம்: கல்வி தகுதி இல்லாத பயிற்சிகள்&தையல், செல்போன் பழுது, பிட்டர், மேசன், வயரிங், ரேடியோ மெக்கானிக், ஜே.சி.பி., மெக்கானிக். கல்வித் தகுதி உள்ள பயிற்சிகள்&நர்ஸ், கம்ப்யூட்டர். பயிற்சி தினமும் 6 மணி நேரம் வீதம் 300 மணி நேரம் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

தென்காசி நகராட்சி பகுதியில் வீடு கட்ட கடன் விண்ணப்பம் பெறல்

Print PDF

தினமலர்                 04.11.2010

தென்காசி நகராட்சி பகுதியில் வீடு கட்ட கடன் விண்ணப்பம் பெறல்

தென்காசி;தென்காசி நகராட்சி பகுதியில் ஏழை மக்கள் வீடு கட்ட கடன் விண்ணப்பம் பெறப்பட்டது.தென்காசி நகராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் சொந்தமாக வீடு கட்ட பாங்க் மூலம் கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் தென்காசியில் நடந்தது. நகராட்சி கமிஷனர் செழியன் தலைமை வகித்து பயனாளிகளிடம் விண்ணப்பங்களை பெற்றார். நகராட்சி மேலாளர் சித்தார்த்தன் வரவேற்றார்.தென்காசி ஆர்..ஐயப்பன், வி...க்கள் ராமனாதன், தேவதாஸ், சார்-பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் ஆகியோர் பயனாளிகளிடம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், பட்டா நகல்களை சரிபார்த்தனர். வருமான சான்று, வில்லங்க சான்று வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.முகாமில் 540 பயனாளிகள் வீடு கட்ட கடன் கேட்டு விண்ணப்பம் வழங்கினர்.

 

500 பேருக்கு ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவி

Print PDF

தினமணி                       02.11.2010

500 பேருக்கு ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவி

மதுரை, நவ.1: மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின விழாவில் 500 பேருக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகராட்சியில் திங்கள்கிழமை உள்ளாட்சி தினவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்து, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்து வருகின்றன. உள்ளாட்சிகள் மூலம் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குடிநீர், கல்வி, சுகாதாரம் என எந்தவொரு திட்டமும், உள்ளாட்சி மூலம்தான் பொதுமக்களுக்குச் சென்றடைந்து வருகிறது.

பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்தும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு திட்டங்கள் மக்களைச் சென்றடைய காரணமாக உள்ளது. கடந்த 2007 முதல் இந்த உள்ளாட்சி தினவிழா தமிழக அரசு மூலம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விழா கொண்டாடப்படுகிறது என்றார் அவர்.

விழாவில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் 500 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டன.

விழாவில், துணை மேயர் பி.எம். மன்னன், துணை ஆணையர் தற்பகராஜ், மண்டலத் தலைவர்கள் இசக்கிமுத்து, நாகராஜன், வி.கே. குருசாமி, தலைமைப் பொறியாளர் சக்திவேல், மக்கள் தொடர்பு அதிகாரி ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ, மாணவியர், செவிலியர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 02 November 2010 11:02
 


Page 7 of 34