Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

நகர்ப்புறங்களில் வீடு கட்ட கடனுதவி

Print PDF

தினமணி 19.10.2010

நகர்ப்புறங்களில் வீடு கட்ட கடனுதவி

உதகை, அக். 18: நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வீடு கட்டுவதற்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட மற்றும் வீடு வாங்க குறைந்த வட்டியில்

கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் கடன் பெற, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஏழை மக்கள் விண்ணப்பிக்கலாம். நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் மாத வருமானம் ரூ. 5 ஆயிரத்துக்குள்ளும், குறைந்த வருவாய் பிரிவினரின் மாத வருமானம் ரூ. 10 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.

நலிவுற்ற பிரிவினருக்கு ரூ. 1 லட்சமும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ. 1.6 லட்சமும் கடனாக வழங்கப்படும். இக்கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும். கடனுக்கு உரிய வட்டித் தொகையில், 5 சதம் மானியமாக வழங்கப்படும்.

கூடுதலாக கடன் தொகை தேவைப்படுவோருக்கு, கூடுதல் தொகைக்கேற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். நலிவுற்ற பிரிவினர் கட்டும் வீடு குறைந்தபட்சம் 25 .மீ. பரப்பலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடு 40 .மீ. பரப்பிலும் இருக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதோர் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.

சொந்தமாக நிலம் வைத்திருப்போர், அதற்கான பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, கோûவை டாடாபாத் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளரைத் தொடர்பு கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்திற்கு உள்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில், உரிய அலுவலரை நேரில் அணுகி, கடன் விண்ணப்பம் அளித்துப் பயனடையலாம்.

 

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட கடன் விண்ணப்பிக்க அழைப்பு

Print PDF

தினகரன் 19.10.2010

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட கடன் விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, அக். 19:நகர் புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சொந்தமாக வீடு கட்ட கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர் புற பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட, வீடு வாங்க மானிய வட்டி யில் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற மாவட்டத்தில் உள்ள நகர் புற ஏழை மக்கள் விண்ணப்பிக்கலாம்.

நகராட்சி மற்றும் பேரூ ராட்சி பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மாத வருமானம் ரூ.5 ஆயிரம் வரை இருத்தல் வேண்டும். குறைந்த வருவாய் பிரிவினர் மாத வருமானம் ரூ.10 ஆயிரம் வரை இருத்தல் வேண்டும். நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.

இக்கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண் டும். கடன் தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத்தரப்படும். கடனுக்குரிய வட்டி தொகையில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைபட்டால் கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.

நலிவுற்ற பிரிவினர் கட்டும் வீடு 25 சதுர மீட்டர் பரப்பு, குறைந்த வருமான பிரிவினர் கட்டும் வீடு குறைந்த பட்சம் 40 சதுர மீட்டர் இருத்தல் வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலம்.

சொந்தமான நிலம் வைத்திருப்போர் அதற்கான பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங் களுக்கு கோவை டாடாபாத்தில் உள்ள கோவை வீட்டு வசதி பிரிவு, தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் உரிய அலுவலரை நேரில் அணுகி கடன் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

 

மானிய வட்டியில் கடனுதவிவீடு கட்ட, வாங்க யோகம்

Print PDF

தினமலர் 18.10.2010

மானிய வட்டியில் கடனுதவிவீடு கட்ட, வாங்க யோகம்

ஊட்டி: நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற பகுதியில் வசிக்கும் நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்ட, வாங்க, மானிய வட்டியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட, வீடு வாங்க, மானிய வட்டியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. திட்டத்தின் கீழ் கடன் பெற, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஏழை மக்கள் விண்ணப்பிக்கலாம். நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மாத வருமானம் 5,000 வரை, குறைந்த வருவாய் பிரிவினர் மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்க வேண்டும்.நலிவுற்றப் பிரிவினருக்கு ஒரு லட்சம் ரூபாய், குறைந்த வருமானப் பிரிவினருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும்; கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டு இடைவெளியில் திருப்பிச் செலுத்த வேண்டும்.கடன் தொகை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும். கடனுக்குரிய வட்டித்தொகையில் ஐந்து சதவீத மானியம் வழங்கப்படும்.

கூடுதலாக கடன் தொகை தேவைப்படுவோருக்கு, கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். நலிவுற்ற பிரிவினர் கட்டும் வீடு குறைந்தபட்சம் 25 .மீ., பரப்பு, குறைந்த வருமான பிரிவினர் கட்டும் வீடு குறைந்தபட்சம் 40 .மீ., இருக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதோர் மட்டும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.சொந்தமாக நிலம் வைத்திருப்போர், அதற்கான பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றவர்களும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, கோவை, டாடாபாத்தில் உள்ள கோவை வீட்டு வசதிப்பிரிவு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில், உரிய அலுவலரை அணுகி விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

Last Updated on Tuesday, 19 October 2010 05:56
 


Page 9 of 34