Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2.10 கோடி நிதி வழங்கல்

Print PDF

தினமலர்            30.08.2012

வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2.10 கோடி நிதி வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புது வாழ்வு திட்டம் மூலம், 90 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு, இரண்டு கோடியே 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர், ஊத்தங்கரை, கெலமங்கலம், சூளகிரி மற்றும் தளி ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள, 178 கிராம பஞ்சாயத்துக்களில் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பணிகளை மக்கள் அமைப்புகளை கொண்டு செயல்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புது வாழ்வு திட்டத்துக்கு, 73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புது வாழ்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களை உறுப்பினராக கொண்டு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் எனும் அமைப்பு பஞ்சாயத்து தலைவரை தலைவராக கொண்டு அமைக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட 90 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கான நிதி, இரண்டு கோடியே 10 லட்ச ரூபாயை கலெக்டர் மகேஸ்வரன் வழங்கினார். புது வாழ்வு திட்டத்தின் அனைத்து பணிகளும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது.இதற்கு ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் மக்கள் தொகை அடிப்படையில் குறைந்த பட்சம் ஆறு லட்ச ரூபாய் முதல் அதிக பட்சம் 25 லட்ச ரூபாய் வரை விடுவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை வாழ்வாதார நிதி வழங்கப்படுகிறது.
Last Updated on Thursday, 30 August 2012 09:52
 

3 மாதத்தில் வீதிகளில் வாழும் ஏழைகளுக்கு வசிப்பிடம்

Print PDF

தினகரன்                 29.11.2010

3 மாதத்தில் வீதிகளில் வாழும் ஏழைகளுக்கு வசிப்பிடம்

பெங்களூர், நவ.29: நகர்ப்புறங்களில் பஸ், ரயில்நிலையங்கள், நடைபாதைகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 3 மாதத்தில் வசிப்பிடம் அளிக்க புதிய திட்டம் வகுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சட்டத்துறைகளுக்கான அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற¢று நகர்புறமாதல் குறித்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் நிருபர்களிடம் பேசும்போது "நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் துரிதகதியில் நடந்துவருகின்றன. அதே நேரம் பஸ், ரயில் நிலையங்கள், நடைபாதைகளில் தங்கியிருந்து வாழ்க்கை நடத்துபவர்களால் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது.

குளிரிலும், மழையிலும் அவர்கள் இருப்பிடம் இன்றி தங்கியிருப்பதை தடுக்க அரசு புதிய வரைவுத்திட்டம் தயாரித்துவருகிறது. இன்னும் 3 மாதங்களில் இவர்களுக்கு இருப்பிடம் அளிப்பது குறித்த புதிய திட்டம் அறிவிக்கப்படும்.

இருப்பிடம் அளிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வசிப்பிடங்கள் இன்றி பொது இடங்களில் வாழ்க்கை நடத்துவோரின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஈடுபட உள்ளது.

2030ம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில்தான் நாட்டின் 50 சதவீத அளவு மக்கள் வசிக்க உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக நகர்ப்புறங்களுக்கு மக்கள் படையெடுத்து வருவதால் நகர்ப்புறங்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம். எனவே முன்னெச்சரிக்கையாக அப்பிரச்னைகளை தடுக்க தற்போதிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்" என்று அவர் தெரிவித்தார்.

 

நகர்ப்புற ஏழைகள் வீடு கட்ட கடனுதவி

Print PDF

தினமலர்              24.11.2010

நகர்ப்புற ஏழைகள் வீடு கட்ட கடனுதவி

விருதுநகர் : நகர்ப்புற ஏழைகள் வீடு கட்டுவதற்கும், வாங்குவதற்கும் கடனுதவி வழங்கப்பட உள்ளது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மாத வருமானம் 5,000 ரூபாய்க்குள் பெறுவோர், 25 சதுர மீட்டர் பரப்பளவிலும், 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பெறுவோர் வீடு 40 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்ட வேண்டும். சொந்த இடத்திற்கான வீட்டு மனை பட்டா பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வருமான அடிப்படையில் ஒரு லட்சம், மற்றும் 1.60 லட்ச ரூபாய் தேசிய வங்கிகள் மூலம் கடன் பெற்றுத்தரப்படும். இதை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். வட்டியில் ஐந்து சதம் மானியமாக வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு மதுரை எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

 


Page 3 of 34