Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்டமானிய வட்டியில் கடன்

Print PDF

தினதந்தி 08.01.2010

நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்டமானிய வட்டியில் கடன்

SLŸ"\ HÛZ UeL• ®| LyP UÖÂV Yyz›¥ LPÁ ER« YZjLTP E•[‰ GÁ¿ UÖYyP LÙXePŸ EUÖ UÚLÍY¡ i½]ÖŸ.

LPÁ ER«

SLŸ"\ HÛZ UeLºeh UÖÂV Yyz›¥ ®| LyP LPÁ ER« ‡yP†‡¥ ®| LyPÚYÖ, YÖjLÚYÖ «QTjL• YWÚY¼LT|f\‰. C‹R ‡yP†‡¥ SLWÖyp, ÚT¤WÖyp Th‡L¸¥ Ypeh• UÖR Y£UÖ]• ¤.3,300 YÛW ÙT¿• ÙTÖ£[ÖRÖW†‡¥ S¦°¼\ ‘¡«]£•, UÖR• Y£UÖ]• ¤.3,301 ˜R¥ ¤.7,300 YÛW ÙT¿• S|†RW Y£UÖ] ‘¡«]£• «Q‘eLXÖ•.

ÙTÖ£[ÖRÖW†‡¥ S¦°¼\ ‘¡«]£eh ¤.1 XyN˜•, S|†RW Y£UÖ] ‘¡«]£eh ¤.11/2 XyN˜• LP]ÖL YZjLT|•. C‹R LPÁ ÙRÖÛL 15 ˜R¥ 20 B| LÖX CÛPÙY¸›¥ ‡£•T ÙN¨†R ÚY|•.

ÚRpV YjfL•

C‹R LPÁ ÙRÖÛLL• ÚRpV YjfL• ™X• ÙT¼¿†RWT|•. LPÁ ÙRÖÛLeh Yyz›¥ 5 NR®R• UÖÂVUÖL YZjLT|f\‰.i|RXÖL LPÁ ÙRÖÛL ÚRÛYT|TYŸLºeh i|R¥ ÙRÖÛLeh H¼T YZeLUÖ] Yyz Ys¦eL T|•. ÙTÖ£[ÖRÖW†‡¥ S¦°¼\ ‘¡«]£eLÖL LyPT|• ®|L• hÛ\‹RTyN• 25 N‰W -yPŸ TWT[° C£eL ÚY|•.

40 N‰W -yPŸ

S|†RW Y£UÖ] ‘¡«]ŸLºeLÖL LyPT|• ®|L• hÛ\‹R TyN• 40 N‰W -yPÖ TWT[° C£eL ÚY|•. LPÁ ÙT¿TYŸL• RÁÄÛPV ÙTV¡ÚXÖ A¥X‰ UÛ]«›Á ÙTV¡ÚXÖ ÙNÖ‹RUÖL ®| C¥XÖRYŸL• Uy|• C‹R ‡yP†‡Á g² «Q‘eL Rh‡ÛPVYŸL•.

ÙNÖ‹RUÖL ŒX• ÛY†‰ C£TYŸL• AR¼h¡V TyPÖ E¡ÛUÛV ÙT¼¿ C£eL ÚY|•. AWpÁ ™X• CXYN ®y| UÛ]TyPÖ ÙT¼¿ E•[YŸLº• C‹R ‡yP†‡¥ ÚNŸ‹‰ TVÁÙT\XÖ•.ÚU¨• «TWjLºeh ‡£op LÖ^ÖUÛX LÖX›¥ E•[ ®y| YN‡ ‘¡° A¨YXL†‡ÚXÖ A¥X‰ L¤Ÿ ®y| YN‡ YÖ¡V TWÖU¡" A¨YX†‡ÚXÖ ÚS¡¥ A„f «Q‘†‰ TVÁ ÙT\XÖ•.ÚU¼LP RLYÛX UÖYyP LÙXePŸ EUÖ UÚLÍY¡ J£ A½eÛL›¥ i½•[ÖŸ.

Last Updated on Friday, 08 January 2010 07:28
 

மானிய வட்டியில் வீடு கட்ட கடனுதவி

Print PDF

தினமணி 07.01.2010

மானிய வட்டியில் வீடு கட்ட கடனுதவி

கரூர், ஜன.6: வீடு கட்டுவதற்கு மானிய வட்டியில் கடன் உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானிய வட்டியில் வீடு கட்ட கடன் உதவித் திட்டத்தில் வீடு கட்டவோ அல்லது வீடு வாங்கவோ கரூர் மாவட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மாத வருமானம் ரூ. 3,300 வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும், மாத வருமானம் ரூ. 3,301 முதல் ரூ. 7,300 வரை பெறும் நடுத்தர வருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ. 1 லட்சமும், நடுத்தர வருமான பிரிவினருக்கு ரூ. 1.50 லட்சமும் கடனாக வழங்கப்படும். இக்கடன் தொகை 15 முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திரும்பச் செலுத்தப்பட வேண்டியதாகும்.

மேற்காணும் கடன் தொகை தேசிய வங்கிகளின் மூலம் பெற்றுத்தரப்படும். கடன் தொகைக்கு வட்டியில் 5 சதம் மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 ச.மீ பரப்பளவும், நடுத்தர வருமானப் பிரிவினர்களுக்கான வீடுகள் குறைந்தபட்சம் 40 ச.மீ பரப்பளவும் இருக்க வேண்டும்.

தம்முடைய பெயரிலோ, மனைவி பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், அதற்குரிய பட்டா உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். அரசின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி காஜாமலை காலனியிலுள்ள திருச்சிராப்பள்ளி வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரையோ அல்லது கரூர் வீட்டு வசதி திட்ட பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய பராமரிப்பு அலுவலகத்தையோ நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Last Updated on Thursday, 07 January 2010 10:39
 

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களை உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபடணும் : அதிகாரிகளுக்கு வளர்ச்சி ஆணையர் 'அட்வைஸ்'

Print PDF

தினமலர் 24.12.2009

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களை உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபடணும் : அதிகாரிகளுக்கு வளர்ச்சி ஆணையர் 'அட்வைஸ்'

அரியலூர் : அரியலூர் தாசில்தார் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் முன்னிலையில், கூடுதல் தலைமைச் செயலாளரும், வளர்ச்சி ஆணையருமான செல்லமுத்து தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள், வேளாண் துறை, வேளாண் பொறியியல், பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறை என பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வளர்ச்சி ஆணையர் செல்லமுத்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது, இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ பல்வேறு ஆக்கப் பணிகளை முதல்வர் செய்து வருகிறார். அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான வசதிகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் முழு கவனம் செலுத்தி வருகிறார். அரியலூர் மாவட்டத்திற்கு தேவையான வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து எது வேண்டுமோ அதை செய்ய தயாராக உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களை, குறுகிய காலத்தில் அவர்களின் வருமானத்தை பெருக்கி, அவர்களையும் உயர் நிலைக்கு கொண்டு வர அவர்களுக்கான தேவையானவைகளை செய்ய வேண்டியது அலுவலர்களின் கடமையாகும். மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனை போன்று ஏனைய துறைகளும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன.

அலுவலகத்திற்கு தேவையான பணியாளர்கள் குறையிருப்பின் விரைவாக நிவர்த்தி செய்யப்படும். மாவட்டத்தில் இயற்கை வளம், மனித வளம் ஆகியவற்றினை கொண்டு அரியலூர் மாவட்டத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் டிஆர்ஓ பிச்சை, திட்ட அலுவலர் வெங்கடாசலம், இணை இயக்குநர்(வேளாண்) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) சடையப்ப விநாயகமூர்த்தி, உதவி இயக்குநர் (காதி) ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் வசந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் நாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 24 December 2009 09:32
 


Page 30 of 34