Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மருத்துவமனை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன்          25.10.2013

மருத்துவமனை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோபி,: கோபி நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதியான கடைவீதி, யாகூப் வீதி, சாரதா மாரியம்மன் கோயில் வீதி சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து நடைபாதை கடை வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த வாரம் கடை வீதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஆனாலும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முறைத்தன. அரசு மருதுவமனைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் நேற்று காலை நகராட்சி அதிகாரிகள் திடீரென அரசு மருத்துவமனை வீதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். கடை முன்பு போடப்பட்டிருந்த பந்தல், சிமெண்ட் கூரை போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதே போன்று நகர் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி           03.10.2013

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

யானைக்கல், வடக்குமாசி வீதி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழக்கடைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சியினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த  யானைக்கல், வடக்குமாசி வீதி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன.

இதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், சின்னம்மாள் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன. நடைபாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த மூன்று சக்கர சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டு மாநகராட்சி வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டன.   யானைக்கல் பகுதியிலிருந்த சாலையோர கோயிலும் அகறறப்பட்டது. இப்பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆர்.நந்தகோபால் ஆய்வு செய்தார்.

அப்போது சில பழக்கடைக்காரர்கள் மாநகராட்சியில் அனுமதி பெற்றிருப்பதாக முறையிட்டனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆணையாளர், யானைக்கல் பகுதியில் மாநகராட்சி ஆணைபெறப்பட்டு நடத்தப்படும் கடைகளுக்கு மாற்று இடம் கொடுத்து, அந்தக்கடைகளையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டதுடன், வாரம் ஒருமுறை இப்பகுதிகளில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஏற்படாதவாறு கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிட்டார்.

உதவி நகரமைப்பு அலுவலர்கள் நாராயணன், முத்துக்குமார், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

சென்னை பாடி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கடும் போக்குவரத்து நெரிசல்

Print PDF

தினமணி           03.10.2013

சென்னை பாடி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை அம்பத்தூர் - பாடி சாலையில், பாடி மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றனர். இன்று காலை முதல் சாலையின் இரு புறத்திலும் வரன்முறை மீறிக் கட்டப்பட்ட பாதைகள், நிழல் தடுப்புகள், படிகள், மாடிப் பகுதிகள் உள்ளிட்டவற்றை இயந்திரங்களைக் கொண்டு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதில், சில மோட்டார் ஷோரூம், கார் ஷோரூம் நிறுவனங்களும் அடங்கும். இதனால் அங்கே வேடிக்கை பார்க்க மக்கள் குவிந்ததுடன், ஜேபிசி இயந்திரங்களின் நடமாட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். பதற்றம் ஏற்படாமல் தடுக்க  போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 


Page 7 of 204