Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கொளிஞ்சிவாடியில்ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி              10.07.2013

கொளிஞ்சிவாடியில்ஆக்கிரமிப்பு அகற்றம்

தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொளிஞ்சிவாடி பகுதியில் செவ்வாய்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

நகரில் தற்போது ரூ.67 கோடி மதிப்பில் குடிநீர் விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வார்டுகளிலும் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. நகராட்சிக்குள்பட்ட 10-வது வார்டு கொளிஞ்சிவாடி பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்பு இருந்ததால், குழாய்கள் பதிக்கும் பணி துவங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் உத்தரவின்பேரில், அப் பகுதியில் அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, குடிநீர் விரிவாக்கப் பணி தொடரும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி               04.07.2013

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம் நகர தேரோடும் வீதிகளில் நகராட்சி சார்பில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
  •  சிதம்பரம் நகரில் நான்கு வீதிகளில், சன்னதிகளில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நடைபாதை ஆக்கிரமிப்பினால் பொதுமக்கள் சாலையில் நடந்துச் செல்வதால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
  •  எனவே போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என டி.எஸ்.பி. ராஜாராம் நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினார்.
  •  இதையடுத்து நகராட்சி சார்பில் நகர அமைப்பு ஆய்வாளர் அருள்செல்வம், சுகாதார ஆய்வாளர் மோகனரங்கன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை சிதம்பரம் நகரில் மேலரதவீதி, கஞ்சித்தொட்டி, வடக்கு வீதி, கீழரதவீதி, மேலசன்னதி, கீழசன்னதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
  •  நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வீதிகள் விசாலமாக காட்சியளிக்கின்றன.
 

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி               26.06.2013

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  திருப்பத்தூர் பேரூராட்சி பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் வரையறுக்கப்பட்ட இடத்திற்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

  ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வட்டாட்சியர் அமிர்தலிங்கம், திருப்பத்தூர் செயல் அலுவலர் சங்கரநாராயணன், பஞ்சாயத்து நில அளவை சார்பு ஆய்வாளர்  ராஜகோபால், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், சார்பு ஆய்வாளர்கள் ஜெயபாண்டியன், நாச்சி ஆகியோர் ஈடுபட்டனர்.

  அக்னி பஜார், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, வாணியன் கோவில் வீதி, அனுமார் கோவில் வீதி, பேருந்து நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

  இப்பணியில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை, சுகாதார மேற்பார்வையாளர்கள் பாலச்சந்திரன், மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் மாலிக், திருப்பதி, இளங்குமரன், அண்ணாத்துரை ஆகியோர் ஈடுபட்டனர்.

 


Page 11 of 204