Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

அனைவருக்கும் வீடு' சட்ட மசோதா: மத்திய அரசு ஆலோசனை

Print PDF

தினமணி 25.07.2009

அனைவருக்கும் வீடு' சட்ட மசோதா: மத்திய அரசு ஆலோசனை

புது தில்லி, ஜூலை 24: ""கட்டுப்படியாகும் விலையில் அனைவருக்கும் வீடு'' குறித்து அரசு இயற்றவுள்ள சட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் செல்ஜா தெரிவித்தார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் செல்ஜா கூறியதாவது:

நிலம் மற்றும் குடியிருப்புகளை உருவாக்குவது மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.

இதற்கு வசதியாக ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை இயற்றுவதும் மாநில அரசுகளின் அடிப்படை பொறுப்பாகும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந்தேதி நடைபெற்ற வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக அமைச்சர்களின் தேசிய மாநாட்டில் கட்டுப்படியாகும் விலையில் அனைவருக்கும் வீடு குறித்து மத்திய அரசு நில மதிப்பீடு பிரச்னைகள், நகர்ப்புற வளர்ச்சிக்கு மாநில அரசுகள் கொண்டு வர வேண்டிய கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மாதிரி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதா ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தச் சட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்

 

குடிசை பகுதிகள் கணக்கெடுப்பு

Print PDF

தினமலர் 23.07.2009

 

குடிசைப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டம்

Print PDF

தினமணி 22.07.2009

குடிசைப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டம்

பழனி, ஜூலை 21: பழனி நகராட்சி குடியிருப்பு குடிசைப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் ஆணையர் (பொறுப்பு) பொறியாளர் சுரேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:

ஒருங்கிணைந்த குடியிருப்பு குடிசைப் பகுதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஓட்டு வீடு, குடிசை வீடு, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள், காலிமனைகள் ஆகிய இடங்களில் ரூ. 1,07,000 திட்ட மதிப்பீட்டில் மராமத்து மற்றும் வீடுகட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதில் ரூ. 35 ஆயிரம் மக்கள் பங்காகவும், மத்திய மற்றும் மாநில அரசின் மானிய நிதியாக ரூ. 72 ஆயிரமும் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

குறும்பபட்டி, தெரசம்மாள் காலனி, பொன்காளியம்மன் கோயில், ஆண்டவன் பூங்கா சாலை, குறவன்பாறை, இட்டேரி சாலை, பெரியபள்ளிவாசல், தெற்கு அண்ணாநகர், ராஜாஜி சாலை, கட்டபொம்மன் தெரு, சத்யாநகர், மதனபுரம், பாளையம் மற்றும் கோட்டைமேட்டுத் தெரு பகுதியில் உள்ளோர் தேர்வு செய்யப்படுவர்.

ரூ. 35 ஆயிரம் செலுத்த மக்களிடம் பணம் இல்லா விட்டால் குறைந்த வட்டியில் நகராட்சியே பணம் பெற்றுத்தர ஏற்பாடு செய்யும். இப்பணி முற்றிலும் இலவசம். இதற்காக யாருக்கும், எந்தத் தொகையும் செலுத்த வேண்டியது இல்லை. அப்படி யாரும் பணம் பெற்றால் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தகவலுக்கு நகராட்சி அலுவலகத்தை அணுகி விவரம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 67 of 69