Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

அடுக்குமாடி குடியிருப்புக்கான அடிக்கல்

Print PDF
தினமணி         08.05.2013

அடுக்குமாடி குடியிருப்புக்கான அடிக்கல்


தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் இலுப்பூரில் கட்டப்பட உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில்  நடைபெற்றது.

ரூ.4 கோடி மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 112 வீடுகளைக் கொண்ட இந்த குடியிருப்பில், 393 சதுர அடி அளவில் வீடுகள் கட்டப்பட உள்ளன.  இந்த குடியிருப்பில் வீடு பெற தகுதியுள்ள பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வீடுகள் வழங்கப்படும். மாதம் ரூ.250 வீதம் 20 ஆண்டுகள் செலுத்தி வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சின்னத்தம்பி, பேரூராட்சித் தலைவர் குரு. ராஜமன்னார், வட்டாட்சியர் வேணுகோபால்,  செயற்பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

அடுத்த மாதத்துக்குள் 6,000 குடிசை மாற்று வீடுகள் தயார்

Print PDF
தினமணி         08.05.2013

அடுத்த மாதத்துக்குள் 6,000 குடிசை மாற்று வீடுகள் தயார்


சென்னை நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு ஜூன் மாதத்துக்குள் தயாராகும் 6,000 குடிசை மாற்று வாரிய வீடுகளில் இடம் ஒதுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக சுமார் 291 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் மழைக்கால நிவாரண இடங்களாக 152 மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூகக் கூடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இப்போது பருவமழைக்குள் அகலப்படுத்தப்படாமல் உள்ள கால்வாய்களை அகலப்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்வழிப்பாதைகளில் மழைநீர் வடிவதற்கு தடங்கலாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சென்னையில் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் 6,000 குடிசை மாற்று வீடுகள் தயார் செய்யப்படும். நீர் வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு இந்த குடியிருப்புகளில் இடம் ஒதுக்கப்படும். மேலும் வடகிழக்கு பருவமழைக்குள் அனைத்து வடிகால்வாய் பணிகளும் முடிக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவில்லை.

நீண்ட நாள்களுக்கு பிறகு இப்போதுதான் நடத்தப்படுகிறது என்றும் இனி ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்படும் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 

திருவொற்றியூரில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF
தினபூமி             07.05.2013

திருவொற்றியூரில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM-Inagurate(C)_2.jpg
திருவொற்றியூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3616 அடுக்குமாடிக் குடியிருப்புகள் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை, மே.7 - தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று (6.5.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை, திருவொற்றியூரில் 139 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி  மூலமாக திறந்து வைத்தார்.

தமிழக கடற்கரை பகுதியிலிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலினால் பெரும் பாதிப்புக்குள்ளாயின. இதனையடுத்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக வங்கி மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 2005-ஆம் ஆண்டு  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா   ஆணையிட்டார்.

குடிசைப் பகுதிகளில் வறிய நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற இன்னல்களுக்கு ஆளாகாமல் நல்ல உறைவிடத்தில் சுகாதாரமான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில்  தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால், சென்னை, திருவொற்றியூரில் 13.69 ஹெக்டர்  பரப்பளவில், அகில இந்திய வானொலி நில திட்டப் பகுதியில் 139 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்குடியிருப்புகள் உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டம் மற்றும் மாநில நிதியுதவியுடன் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் 113 கட்டட தொகுதிகளாகக் கட்டப்பட்டுள்ள 3616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்டுள்ள இப்புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தெரு விளக்குகள், ஆரம்பப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை, சமுதாயக் கூடம், நூலகம், பூங்கா, நிலத்தடி நீர் தொட்டி போன்ற அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்பு தொகுதிகளில் உள்ள குடியிருப்பு அலகு ஒவ்வொன்றும் 3 லட்சத்து 86 ஆயிரம் பொய் மதிப்பீட்டில் 278 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களிலுள்ள 1941 பயனாளிகள், சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 15 பகுதிகளிலுள்ள 1014 பயனாளிகள், கட்டமைப்பு விரிவாக்க திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 661 பயனாளிகள், என மொத்தம்  3616 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இயற்கை சீற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதுடன், நான்கு வழி சாலை விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான இடத்தை பெறவும், குடிசைகள் இல்லா நகரமாக சென்னையை உருவாக்கிடவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில்,  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 


Page 12 of 69