Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

கோவையில் மண்ணில் புதைந்த 48 வீடுகளை இடித்து தள்ள உத்தரவு அமைச்சர் சுப.தங்கவேலன் தகவல்

Print PDF

தினகரன்                   25.11.2010

கோவையில் மண்ணில் புதைந்த 48 வீடுகளை இடித்து தள்ள உத்தரவு அமைச்சர் சுப.தங்கவேலன் தகவல்

கோவை, நவ. 25: கோவை அம்மன்குளத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், 1608 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், இடபற்றாக்குறை யால், 16 பிளாக்குகளில், 936 வீடுகள் கட்டும் பணி துவங்கியது. 3 ஆண்டுகளில், 31 கோடி ரூபாய் செலவில் பணி முடிக்க திட்டமிடப்பட்டது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், ஏஏ என்ற 48 வீடுகளுக்கான பிளாக் மண்ணில் சாய்ந்த நிலையில் புதைந்தது. 4 அடு க்கு கொண்ட இந்த பிளாக் கின் கட்டுமான தன் மை, அஸ்திவார மண் ஆய்வு செய் யப்பட்டது. அபாய நிலையில் இருப்பதாக கூறி கட்டடத் தின் பக்கவாட்டு சுவர்களை இடித்தனர். இந்நிலையில், ஏஏ பிளாக் அருகேயுள்ள பிபி என்ற 48 வீடு கொண்ட மற்றொரு பிளாக் மைய பகுதி யில் இரண்டாக விரிசல் விட்டு பிளந்தது. இதைதொடர்ந்து மொத்த கட்டுமான பணியும் நிறுத்தப்பட்டது.

இந்த வீடுகளின் நிலை குறித்த தமிழக குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப.தங்கவேலன் நேற்று ஆய்வு நடத்தினர். பாதி இடிக்கப்பட்ட வீடுகள், விரிசல் விட்ட நிலையில் காணப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பிபி பிளாக்கின் மைய சுவர், 17 செ.மீ அளவிற்கு விரிசல் விட்டு காணப்பட்டது. இதை அமைச்சர் பார்வையிட்டபோது, குடிசைவாசிகள் முற்றுகையிட்டனர். மண் ணில் புதையும் வீடுகளில் எப்படி நாங்கள் வாழ முடி யும். இங்கே எங்களுக்கு வீடு கள் வேண்டாம், வீடு கொடுத் தால் நாங்கள் குடியிருக்க மாட் டோம். தரமாக வீடு கட்டா மல், புதை மண் பூமியில் ஏன் வீடு கட்டுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு அமைச் சர் வீடுகளை தரமாக கட்டி ஒப்படைக்கிறோம் என தெரிவித்தார்.

இதைதொடர்ந்து அமைச் சர் சுப.தங்கவேலன், உக்கடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் 2232 வீடுகளை பார்வையிட்டார். விரைவில் உக்கடத்தில் 9600 வீடுகள் கட்டப்படவுள்ளது.

முன்னதாக அமைச்சர் சுப.தங்கவேலன் நிருபர்களி டம் கூறியதாவது:

தமிழகத்தில் 1.06 லட்சம் குடிசை மாற்று வாரிய வீடு கள் இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 45 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டது. அம் மன் குளத்தில், பாதி இடித்த நிலையில் விடப்பட்ட 48 வீடுகளை முற்றிலும் இடிக்க முடிவு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இனி வீடு கட்டப்படமாட்டாது. இதற்கு பதிலாக உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத் தில் 48 வீடுகள் கட்டப்படும். இதற்கான தொகையை, ஏற் கனவே வீடு கட்டிய ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து பிடித்தம் செய்து விட்டோம். விரைவில் வீடு கட்டும் பணி நடத்தப்படும். சாய்ந்த கட்ட டம் தொடர்பான மண், கட்டட தன்மை குறித்து ஐ..டி தொழில் நுட்ப குழு ஆய்வு நடத்தி வருகிறது. ஒரு வாரத்தில் முடிவு கிடைத்து விடும். அதற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட பணியை நடத்த முடிவு செய்திருக்கிறோம். சாய்ந்த நிலையில், ஒரு பிளாக் கில் உள்ள கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத் தும் பணி நடக்கிறது. ஒரு மூட்டை சிமெண்ட்டில் 100 லிட்டர் தண்ணீர் கலந்து அதனை அழுத்த முறையில் செலுத்தி பலப்படுத்தி வருகி றோம். இந்த பிளாக்கில் 240 டன் எடை கொண்ட மணல் மூட்டைகளை குவித்து தாங்கு திறனை பரிசோதித்து விட் டோம். ஒரு மாதம் இந்த எடை இருந்தும் கட்டடம் சிறிது கூட சாய வில்லை. மற்ற கட்டடங்கள் நன்றாக இருக்கிறது. இதில் மக்கள் குடியேறி வசிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தமிழக ஊரக தொழில்துறை அமைச் சர் பொங்கலூர் பழனிசாமி, மேயர் வெங்கடாசலம், குடி சை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் ராமலிங்கம், துணை மேயர் கார்த்திக், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, செயற்பொறியாளர்கள் சுகு மார், லட்சுமணன், உதவி பொறியாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் பேரூராட்சிகளுக்கும் விஸ்தரிப்பு

Print PDF

தினகரன்             24.11.2010

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் பேரூராட்சிகளுக்கும் விஸ்தரிப்பு

சென்னை, நவ. 24: ‘தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’’ விரிவுப்படுத்தப்படும்என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதி தலைமையில், துணை முதலமைச்சர் மு..ஸ்டாலின் முன்னிலையில், ‘‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’’ சம்மந்தமான ஆய்வு கூட்டம் நேற்று மாலை கோட்டையில் நடந்தது.

இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 4 ஆயிரத்து 63 வீடுகள் நிறைவு பெற்றிருப்பது அறிந்து முதல்வர் கருணாநிதி தொடர்புடைய அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த ஓர் ஆண்டிலேயே&கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி& ஆகிய 13 மாவட்டங்களில் கணக்கெடுக்கப்பட்ட குடிசைகள் அனைத்தும் ‘‘கான்கிரீட்’’ வீடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

மேலும், அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் ‘‘கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது என்றும், பேரூராட்சிகளில் உள்ள குடிசைகளைக் கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்கள், குளிர்ப் பிரதேசங்கள் என்பதால், அந்தப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோர் ஓலைக் குடிசைகளுக்குப் பதிலாக, தகரத்தாலும், பிளாஸ்டிக்காலும் வேயப்பட்ட சிறு வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். சிறப்பு தேர்வாக, மலைப் பிரதேசங்களில் ஏழை எளியோர் வாழ்ந்துவரும் இத்தகைய வீடுகளையும் கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் குடிசை வீடுகளே 561 பேரூராட்சி தமிழகத்தில் மொத்தம் 12,620 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அது போலவே 561 பேரூராட்சிகளிலும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளது.

இல்லை எனும் புதிய வரலாற்றைப் படைப்பதற்காக, தமிழகத்தின் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 21 லட்சம் குடிசை வீடுகளை, தமிழ்நாடு அரசின் முழு நிதி உதவியுடன் 6 ஆண்டுகளில் ‘‘கான்கிரீட்’’ வீடுகளாக மாற்றித் தருவது என்றும்; முதல் கட்டமாக இந்த ஆண்டில்(2010&2011), 3 லட்சம் குடிசைகளுக்குப் பதில், புதிய ‘‘கான்கிரீட்’’ வீடுகளைக் கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ75 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கிட ஏற்கனவே முடிவு செய்து, அதன்படி 3 லட்சம் ‘‘கான்கிரீட்’’ வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகள் அனைத்தும் 2011, ஜனவரி மாதத்திற்குள் நிறைவுறும்.

இன்று(நேற்று) நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தலைமை செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளர் அலாவூதீன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உதயசந்திரன் மற்றும் பேரூராட்சி இயக்குநர் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

ஒதுக்கீட்டு ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார் 85 சலவை தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

Print PDF

தினகரன்                           22.11.2010

ஒதுக்கீட்டு ஆணையை மு..ஸ்டாலின் வழங்கினார் 85 சலவை தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

சென்னை, நவ.22: சலவை தொழிலாளர்கள் 85 பேருக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் திட்டப்பகுதியில் 120 குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ3.09 கோடி செலலில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ2.58 லட்சம் மதிப்புள்ளது. முதற்கட்டமாக, இவற்றில் 85 வீடுகளை சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கும் விழா, சென்னை கோட்டையில் நேற்று நடந்தது. குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை, பயனாளிகளுக்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், பெரம்பூர் கவுதமபுரம் திட்டப்பகுதியில் பழுதடைந்த 48 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் ரூ1.07 கோடி செலவில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு குடியிருப்பும் ரூ2.23 லட்சம் மதிப்புள்ளது. ஏற்கனவே, அந்த குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களுக்கு, மீண்டும் அதே இடத்தில் வசிப்பதற்கான குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், வி.எஸ்.பாபு எம்எல்ஏ, வீட்டு வசதித்துறைச் செயலாளர் அசோக் டோங்ரே, குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 20 of 69