Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசைகளை மேம்படுத்த மாநகராட்சி தீவிரம் :1,050 வீடுகள் கட்டி முடிச்சாச்சு!

Print PDF

தினமலர்                     19.11.2010

குடிசைகளை மேம்படுத்த மாநகராட்சி தீவிரம் :1,050 வீடுகள் கட்டி முடிச்சாச்சு!

திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சியில் ஒருங் கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்படுத்துதல் மற்றும் புதிய குடியிருப்பு அமைத் தல் திட்டங்களில், இதுவரை 1,050 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது 400 வீடுகளில் கட்டுமான பணி நடந்து வருகிறது.மாநகராட்சிக்கு உட்பட்ட பூலவாரி சுகுமாரன் நகர், காங்கயம் பாளையம் புதூர், அண்ணமார் காலனி, சூசையாபுரம், சின்னா நகர், குமரப்பபுரம், மிஷின் வீதி, சத்யா நகர், செம்மேடு, ராஜிவ் நகர் உள்ளிட்ட 110 இடங்கள், குடிசை குடியிருப்புகளாக அடையாளம் காணப்பட்டன. இப்பகுதிகளில், ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2007-08 முதல், மாநகராட்சி நிதி ஒதுக்கீடு மூலம் வீடுகள் கட்ட மானியம்வழங்கப்படுகிறது.புதிய குடியிருப்பு திட்டத்தின் கீழ், நான்கு தவணைகளாக 18 ஆயிரம் ரூபாய் வீதம் 72 ஆயிரம் ரூபாய் மானியமாக பயனாளிகளுக்கு மாநகராட்சி சார்பில் வழங் கப்படுகிறது. தரைமட்டம் எழுப் பியதும் ஒரு தவணை, கூரை மட்டம் வரை கட்டுமான பணி முடிந்த நிலையில் ஒரு தவணை, மேற்கூரை அமைத்த நிலையில் ஒரு தவணை, வீடு முழுமையான பின் ஒரு தவணை என நான்கு முறையும் தலா 18 ஆயிரம் ரூபாய் என 72 ஆயிரம் ரூபாய் வழங் கப்படுகிறது.இதுதவிர, குடிசை குடியிருப்புகளில் வீடுகள் பராமரிப்புக்காக 36 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கி, வீட்டு கூரை புதுப் பித்தல், தளம் அமைத்தல், காம்பவுண்ட் சுவர் எழுப்புதல் மற்றும் கழிப்பிடம் கட்டி, வீடுகள் புதுப்பிக்கப்படுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில், காங்கயம்பாளையம் புதூர், அண்ணமார் காலனி, பூலவாரி சுகுமாரன் நகர், சின்னா நகர், கே.வி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மேம்பாடு மற்றும் புதிய குடியிருப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 250 புதிய வீடுகள், 800 வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட் டுள்ளன. கட்டுமான பொருட் களின் விலை உயர்வால் கட்டுமான பணி பாதிக்கக்கூடாது என்பதற்காக, இவ்வீடுகள் கட்டுவதற்கு 200 ரூபாய் மதிப்பில் சிமென்ட் மூட்டைகள் அளிக்கப் படுகின்றன.இத்திட்டத்தின் துவக்கத்தில், புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் வீடுகளை பராமரித்து புதுப்பித்து கட்ட மக்கள் மத்தியில் போதிய ஆர்வம் இல்லை; நான்கு தவணைகளில் நிதி வழங்கப்பட்டாலும், சொந்த பணத்தை செலவழித்து கட்டுமான செலவை முடித்துவிட்டு, ஆதாரமாக புகைப்படங் களை சமர்ப்பித்த பிறகே நிதி வழங்கப்படுகிறது. இதனால் சொந்த பணத்தை செலவிட பயனாளிகள் தயக்கம் காட்டினர்.தற்போது, அந்நிலை மாறி மாநகராட்சி தரும் நிதியுடன், வீடுகளை கட்டிக் கொள்ளும் பயனாளிகளும் ஒரு தொகையை செலவிட முன் வருவதால் புதிய குடியிருப்புகள் மற்றும் குடிசை குடியிருப்புகளை மேம் படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டு பணிகள் வேகமாக நடக்கின்றன.

இத்திட்டத்தின் கீழ் கட்டப் படும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு இலவசமாக செய்து தருவதால், கட்டுமான பணியை துரிதமாக முடிப்பதில் பயனாளிகள் தீவிரம் காட்டுகின்றனர்.சில பகுதிகளில் பயனாளிகள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், அப்பணியில் மெத்தனம் நீடிக்கிறது. மேலும், கட்டுமான பணியை பயனாளிகளே சொந்த பொறுப்பில் மேற்கொள்ள வேண்டும். இதற் கும் பயனாளிகளில் ஒரு தரப்பினர் போதிய ஆர்வம் காட்டாததால் கட்டுமான பணி முடியாமல் தேக்கம் ஏற்படுகிறது. சிலபகுதிகளில் பணிகள் முடியாமல் நீடிக்கிறது.இதுவரை, 250 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 800 வீடுகளில் பராமத்து பணி செய்து புதுப்பிக் கப்பட்டு உள்ளன. 400 வீடுகளில் கட்டுமான பணி நடந்து வருகின்றன; அடுத்தகட்டமாக 800 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட உள்ளது.

 

மும்பையில் 2011&ம் ஆண்டில் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 87 லட்சமாக அதிகரிக்கும்

Print PDF

தினகரன்              16.11.2010

மும்பையில் 2011&ம் ஆண்டில் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 87 லட்சமாக அதிகரிக்கும்

மும்பை, நவ.16: நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையில் அடுத்த ஆண்டுவாக்கில் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 86 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரிக்கும் என்று மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு கணித்துள்ளது.

இந்தியாவை குடிசைகள் இல்லாத நாடாக மாற்றும் நோக்கத்துடன் ராஜிவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டில் உள்ள குடிசைவாசிகளின் எண்ணிக்கை சரியான முறையில் கணக்கிடப்படவில்லை என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் கருதியது. இதனையடுத்து உண்மையானகுடிசைவாசிகளின் எண் ணிக் கையை மதிப்பீடு செய்ய நிபுணர் குழு ஒன்றை அந்த அமைச்சகம் அமைத்து இருந்தது. இந்த குழு புதிய வழிமுறை ஒன்றை பின்பற்றி நாட்டில் உள்ள குடிசைவாசிகளின் எண்ணிக்கையை கணித்து இருக்கிறது.

இதன்படி மும்பையில் அடுத்த ஆண்டுவாக்கில் 86 லட்சத்து 80 ஆயிரம் குடிசைவாசிகள் இருப்பார்கள். மும்பைக்கு அடுத்த படியாக டெல்லியில் 31 லட்சத்து 60 ஆயிரம் குடிசைவாசிகள் இருப்பார்கள். கடந்த 2001ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் டெல்லியில் 23 லட்சம் குடிசைவாசிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மும்பையில் 65 லட்சம் குடிசைவாசிகள்தான் இருந்தார்கள் என்ற போதிலும் நிபுணர் குழுவின் புதிய மதிப்பீட்டின்படி இந்த எண்ணிக்கையை 68 லட்சம் என நிபுணர் குழு கணித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் குடிசைப் பகுதி மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சம் அதிகரித்து இருப்பதாகவும் நிபுணர் குழு கூறியுள்ளது. அடுத்த ஆண்டுவாக்கில் நாட்டின் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாக இருக்கும். 2001ம் ஆண்டில் இது 7 கோடியே 52 லட்சமாக இருந்தது.

மெட்ரோ நகரங்களில் மும்பை மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக கொல்கத்தாவில் அடுத்த ஆண்டில் 17 லட்சத்து 80 ஆயிரம் குடிசைவாசிகள் இருப்பார்கள். சென்னையில் 10 லட்சத்து 2 ஆயிரம் குடிசைவாசிகள் இருப்பார்கள்.

மாநில அளவில் அடுத்த ஆண்டுவாக்கில் மகாராஷ்டிராவில் 1.81 கோடி குடிசைவாசிகளும், உத்தரபிரதேசத்தில் 1.08 கோடி குடிசைவாசிகளும், மேற்கு வங்கத்தில் 85 லட்சம் குடிசைவாசிகளும், ஆந்திராவில் 81 லட்சம் குடிசைவாசிகளும் இருப்பார்கள் என நிபுணர் குழு கணித்து இருக்கிறது.

 

ரூ 280 கோடி செலவில் கட்ட திட்டம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நெற்குன்றத்தில் 21 மாடி குடியிருப்பு

Print PDF

தினகரன்                 16.11.2010

ரூ 280 கோடி செலவில் கட்ட திட்டம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நெற்குன்றத்தில் 21 மாடி குடியிருப்பு

சென்னை, நவ.16: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 280 கோடி ரூபாய் செலவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்காக 21 அடுக்குமாடி குடியிருப்பை சென்னை புறநகரில் அமைக்கிறது. ஒவ்வொரு வீடும் குறைந்தது ஒரு கிரவுண்ட் பரப்பிற்கு கட்டப்படும்.

சென்னை புறநகர் பகுதியான நெற்குன்றத்தில் 13.2 ஏக்கரில் இந்த குடியிருப்பு அமையவுள்ளது. மொத்தம் ரூ280 கோடி செலவில் 21 அடுக்குமாடி கட்டப்படும். இவற்றில் தரை கீழ் தளம், தரைதளம் முழுக்க வாகனங்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்படும். இந்த குடியிருப்பில் பரப்பளவை பொருத்து இரண்டு வகையான வீடுகள் அமைக்கப்பட உள்ளன.

முதல் வகை 2458 சதுர அடி கொண்ட வீடு. இதில் 4 படுக்கை அறைகள் உட்பட சமையல் அறை, சாப்பிடும் அறை, வரவேற்பு அறை, குடும்ப அறை ஆகியவை கொண்டதாக இருக்கும். அனைத்து படுக்கை அறைகளும் கழிவறை, குளியல் அறைகள் கொண்டவை. இதன் விலை 64 லட்சம் ரூபாய்.

இரண்டாவது வகை 1923 சதுர அடி உள்ள வீடு. இதில் மற்ற அறைகளுடன் 3 படுக்கை அறைகள் இருக்கும். இந்த வீட்டின் விலை 50 லட்சம் ரூபாய்.

குடியிருப்பை தவிர நீச்சல் குளம், பூங்கா, பொது அரங்கு, உடற்பயிற்சி கூடம், கடைகளும் அமைக்கப்பட உள்ளன. திறந்தவெளியில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதி கிடையாது.

வரும் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் கட்டுமான பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

விருப்பமுள்ளவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு தனித்தனியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையுடன் வீட்டின் மாதிரி வரைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. வீடு வாங்க விரும்பும் அதிகாரி இம்மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் மற்றும் வைப்புத் தொகையாக ஒரு லட்ச ரூபாய் செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 21 மாடி உயரக் குடியிருப்பை அமைப்பது இதுவே முதல் முறை.

 


Page 21 of 69