Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருக்கோவிலூரில் 25 நாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினகரன்                30.01.2014

திருக்கோவிலூரில் 25 நாய்களுக்கு கருத்தடை

திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வந்தது. இதில் நகர்ப்புறத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் அதிகளவ் விபத்துகள் நடந்து வந்தது. கடந்த வாரம் வெறிநாய் கூட்டம் சுமார் 20 பேரை கடித்து குதறியது. இதனால் திருக்கோவிலூர் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.

 இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்திரவின் பேரில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்ய சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  அதன்படி நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நேற்று முதல் கட்டமாக திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 25 நாய்களை கண்டறிந்து அவைகளுக்கு கால்நடை மருத்துவர் களால் கருத் தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த சிறப்பு அறுவை சிகிச்சை முகாமில் பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமுருகன், துணைத்தலைவர் குணா, செயல்அலுவலர் சுந்தரம்,  மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுப்பு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், கால்நடைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

 

கூடலூர் நகராட்சியில் கூட்டு துப்புரவு இயக்கம்

Print PDF

தினமணி           29.01.2014 

கூடலூர் நகராட்சியில்  கூட்டு துப்புரவு இயக்கம்

கூடலூர் நகராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கூட்டு துப்புரவு இயக்கம் நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில், மேல்கூடலூர், ஓ.வி.ஹெச். சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன. சாலையோரப் புதர்கள் சுத்தம் செய்யப்பட்டன. இதில், நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எடிசன் அற்புதராஜ், ரமேஷ் மற்றும் மேற்பாற்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

 

"பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

Print PDF

தினமணி           29.01.2014 

"பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

கோவை, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சிக் கலையரங்கில் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் இணைந்து, மாநகராட்சிப் பகுதிகளில் மருத்துவக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாள்வது குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  • மருத்துவமனைக் கழிவுகள் மற்றும் 40 மைக்ரான் அளவுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் ஒழிப்புக்குக் கருத்துக் கேட்கப்பட்டது. சிறிய கடைகளில் ஆய்வு செய்வதும் மக்களிடம் அபராதம் வசூலிப்பதும் கூடாது; உற்பத்தியாகும் இடத்திலேயே பிளாஸ்டிக் பொருள்களைத் தடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
  • கருத்துகளைக் கேட்ட பின் மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:
  • தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவையை பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவது தான் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம். மாநகராட்சி மட்டும் தன்னிச்சையாகச் செயல்படாமல் மக்கள் கருத்தைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
  • துப்புரவுத் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து தன்னார்வ அமைப்புகளிடம் விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அனைவரும் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்.
  • மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 10 சதவீத பிளாஸ்டிக் தான் அகற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் கருத்துக் கூறியபடி உற்பத்தியாகும் இடத்தில் பிளாஸ்டிக் பொருள்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் ஆதரவு தர வேண்டும்; வியாபாரிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும்.

 உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்புடன் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்க தனியாக மையங்கள் ஏற்படுத்தப்படும். பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

 மாநகராட்சி ஆணையர் ஜி.லதா, துணை ஆணையர் சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 


Page 11 of 519