Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அவிநாசியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Print PDF

தினமணி          26.01.2014 

அவிநாசியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

அவிநாசி பேரூராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 32 நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

  இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அவிநாசி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

  இதில் பிடிக்கப்பட்ட 32 நாய்கள், அவிநாசி உரப் பூங்கா வளாகத்தில், புதிதாக அமைப்பட்டுள்ள விலங்குகள் பிறப்பு கட்டுப்படுத்தும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அந் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, அவிநாசியில் விரைவில் சிறப்பு முகாம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ளோர் தங்களது வீட்டு நாய்களை கொண்டு வந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள்

Print PDF

தினமணி             25.01.2014 

நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள்

வாணியம்பாடி நகராட்சியில் பொதுப் பிரிவில் துப்புரவுப் பணியாளர்களுக்குச் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ரவி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு கையுறை, தலைக்கவசம், சீருடைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார் . நிகழ்ச்சியில் மேலாளர் சுரேஷ், துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன், நடராஜன், விஜயகுமார், அலி, அலுவலர்கள் குரு சீனிவாசன், அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

187 தெருநாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினமணி             22.01.2014 

187 தெருநாய்களுக்கு கருத்தடை

நந்திவரம்- கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் தெருநாய்கள் அடுத்தடுத்து 7 பேரை கடித்த சம்பவத்தின் எதிரொலியாக 187 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் வள்ளி நகரில் பள்ளி மாணவி தனபிரியாவை (4), தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதைடுத்து நாய்கள் கருத்தடை மையம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நந்திவரம் கால்நடை மருத்துவமனை அருகில் ரூ.5 லட்சம் மதிப்பில் நாய்கள் கருத்தடை மையம் கட்டப்பட்டது.  இந்நிலையில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் கடந்த 9-ஆம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 4 மாணவர்கள் மற்றும் சாலையில் நடத்துச் சென்றுக் கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 7 பேரை அங்கு சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த வெறிபிடித்த நாய் கடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.  அதன் எதிரொலியாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி ஊழியர்கள் அப்பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் கூறியது: சென்னை வேளச்சேரியில் உள்ள புளுகிராஸ் அமைப்பு மற்றும் மீஞ்சூரில் உள்ள ஹேண்ட் ஃபார் அனிமல் அமைப்புகள் உதவியுடன்  பேரூராட்சி ஊழியர்கள் 187 தெருநாய்களை பிடித்தனர். பிடிபட்ட நாய்கள் நந்திவரம் கருத்தடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவைகளுக்கு  தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பிறகு அவைகளை தெருக்களில் மீண்டும் கொண்டுச் சென்று விட திட்டமிடப்பட்டுள்ளது.   தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் நடவடிக்கை தீவிரமாக தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

 


Page 12 of 519