Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினமலர்             13.12.2013

இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து

சென்னை:சென்னையில் வசிக்கும் இடம் பெயர்ந்தவர்களின் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நாளை, சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:

சாலையோரம் வசிப்போர், நரிக்குறவர்கள், கழைக்கூத்தாடிகள், பணி நிமித்தம் இடம் பெயர்வோர், செங்கல் சூளையில் பணிபுரிவோர், கட்டுமான தொழிலாளர்கள் என, சென்னையில் வசிக்கும் இந்த வகையை சேர்ந்தவர்கள், அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டே உள்ளனர்.

அவர்களின் குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசிகள் போடப்படுவது இல்லை. இதனால் இந்த குழந்தைகளை அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும், சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, சென்னையில் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளாக, 725 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

அங்கு வசிப்போரின், ஐந்து வயக்குட்பட்ட, 1,283 குழந்தைகளுக்கு நாளை (14ம் தேதி) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக, மாநகராட்சி சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. இவ்வாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

ஓமலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீருடையில் மாற்றம்

Print PDF

தினமணி              10.12.2013

ஓமலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீருடையில் மாற்றம்

தினமணி செய்தி காரணமாக, ஓமலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம்,  ஓமலூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் அரைக்கால் சட்டை அணிந்து பணியாற்றுவது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மையப்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டை என்ற நிலையிலிருந்து, முழுக்கால் சட்டை (பேண்ட்) என்ற மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

ஏற்காடு இடைத் தேர்தல் முடிவுற்ற நிலையில், திங்கள்கிழமை முதல் துப்புரவுப் பணியாளர்கள் புதிய சீருடையை அணிந்து பணியைத் தொடங்கினர்.

எனினும் பெரும்பாலான இடங்களில் துப்புரவுப் பணியாளர்கள் வெறும் கைகளாலேயே கழிகளை அகற்றி தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

 துர்நாற்றம் வீசும் குப்பைகளை அள்ளும் போது, பாதுகாப்பு முகக் கவசம், கையுறை, கால்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு முழங்கால் வரையிலான காலணிகள் இல்லாததால் காலால் குப்பையை ஒன்று சேர்த்து வெறுங்கைகளாலேயே அள்ளி நகரத்தை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

குறைந்தபட்ச ஊதியமாக இருந்தாலும் நகரத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதில் இவர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.

இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்து கொடுப்பதுடன் சுகாதாரம், பணி பாதுகாப்பும் வழங்கினால் மேலும் திறம்பட பணியாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.

 

ராசிபுரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை

Print PDF

தினமணி               09.12.2013

ராசிபுரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை

  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசின் சீருடை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவாளர்களுக்கான சீருடைகளை நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் வழங்கினார். மொத்தம் 119 பணியாளர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சீருடைகள் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், நகராட்சி மேலாளர் வே.சண்முகம், துப்புரவு அலுவலர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 18 of 519