Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சியில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்

Print PDF

தினமணி           06.12.2013

மாநகராட்சியில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி (இடமிருந்து 3-வது). உடன் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். கோகுல இந்திரா, வி.பி. கலைராஜன், துணை மேயர் பா. பெஞ்சமின், நிலைக்குழு உறுப்பினர் (சுகாதாரம்) ஆ. பழனி உள்ளிட்டோர் உள்ளனர்.
மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி (இடமிருந்து 3-வது). உடன் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். கோகுல இந்திரா, வி.பி. கலைராஜன், துணை மேயர் பா. பெஞ்சமின், நிலைக்குழு உறுப்பினர் (சுகாதாரம்) ஆ. பழனி உள்ளிட்டோர் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி நடத்தும் இலவச மருத்துவ முகாம்கள் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் மூலம் சுமார் 20 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களை அனைத்து வார்டுகளிலும் நடத்துகிறது.

டிசம்பர் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் டிச. 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமை, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

செனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் துணை மேயர் பா. பெஞ்சமின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். கோகுலஇந்திரா, வி.பி. கலைராஜன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) ஆ. பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாம்களில் 160 மாநகராட்சி மருத்துவர்கள், 2,000 உதவி மருத்துவ ஊழியர்கள், 700-க்கும் மேற்பட்ட தனி மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 3 அரசு மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் 15 தனியார் மருத்துவமனைகளும் இதில் பங்கேற்றுள்ளன.

முதன்மை முகாம்கள்: 15 இடங்களில் நடைபெறும் முதன்மை முகாம்களில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். முகாம்களில் பெறப்படும் அனைத்து தகவல்களும் கணினி மூலம் அட்டவணைப்படுத்தப்படுகின்றன.

மேலும் வார்டுக்கு 5 குடிசைப் பகுதிகள் வீதம் 1,000 குடிசைப் பகுதிகளில் முகாம்கள் நடப்படும்.

இதில் 1.5 லட்சம் சுய உதவிக்குழு அமைப்புகளின் மகளிர் மற்றும் குடும்பத்தினர், அங்கன்வாடி குழந்தைகள், 1 லட்சம் வீடற்ற மக்கள், 25,000 மாநகராட்சி ஊழியர்கள், 1.5 லட்சம் ஹோட்டல் தொழிலாளர்கள், கோயம்பேடு, மெரீனா கடற்கரை சிறு வியாபாரிகள், இடம் பெயர்ந்து சென்னையில் வசிப்போர் உள்ளிட்ட சுமார் 20 லட்சம் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

முதல் நாளில் 86 ஆயிரம் பேர் பயன்

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாமில் முதல் நாளில் மட்டும் சுமார் 86 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்.

200 இடங்களில் (வார்டுக்கு ஒன்று) நடைபெற்ற இந்த முகாம்களில், 27,735 ஆண்கள், 36,946 பெண்கள், 13,798 சிறுவர்கள், 7,761 சிறுமிகள் என முதல் நாளில் மட்டும் மொத்தம் 86,240 பேர் பயன்பெற்றனர்.

முதன்மை முகாம் இடமாற்றம்

இந்த சிறப்பு மருத்துவ முகாம்களின் ஒரு பகுதியாக மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 முதன்மை முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்கள் தினமும் ஒரே இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதன்மை முகாம், லாயிட்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறும். மற்ற முதன்மை முகாம்களின் இடம் மாற்றப்படவில்லை.

 

கழிவுநீர் குழாய்களில் வலை பொருத்தும் பணி

Print PDF

தினகரன்           05.12.2013 

கழிவுநீர் குழாய்களில் வலை பொருத்தும் பணி

புதுச்சேரி, :   புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஜெ.ஜெ.நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் குழாய்களுக்கு கொசு வலை பொறுத்தும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் முனுசாமி, உதவி திட்ட அதிகாரி இரிசன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிகுழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் பெருகி வரும் கொசுக்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உழவர்கரை நகராட்சியில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜெ.ஜெ.நகரில் கழிவு நீர் குழாய்களில் கொசு வலை பொறுத்தும் பணியை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தும் பணி துவக்கப்பட்டது. இதே போன்று புதுவையின் அனைத்து பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ள உள்ளது.

 

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்           05.12.2013 

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

அனுப்பர்பாளையம்,: சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, டெங்கு கொசு ஒழிப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பகுதியில் சாலையோரம் உள்ள இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன பஞ்சர் கடைகளின் முன்புறம் ரோட்டோரமாக சேமித்து வைத்திருக்கும் உபயோகமற்ற பழைய டயர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இருந்து இரு சக்கர வாகன டயர்கள் 221, சைக்கிள் டயர்கள்132,  லாரி டயர்கள் 8 உள்பட 361 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவிநாசி வட்டார தலைமை மருத்துவர் ராமசாமி, சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாலர்கள ரமே ஷ்,செல்வ ராஜ், பரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பாலதண்டபானி, சுகாதார மேஸ்திரி ரவி மற்றும் பேரூராட்சி சுகாதார பனியாளர்கள் பங்கேற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உபயோகமற்ற 361டயர்கள் அவிநாசி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

 


Page 20 of 519