Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.60.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன்             25.01.2014

ரூ.60.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்

பரமக்குடி, : பரமக்குடியில் ரூ.60.50 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை, முத்தாலம்மன் படித்துறை, கோகுலர் தெரு, மஞ்சள்பட்டினம் பகுதியில் தலா ரூ.10 லட்சம், வைகை நகரில் ரூ.14.50 லட்சம், எமனேஸ்வரத்தில் ரூ. 6 லட்சம் என மொத்தம் ரூ.60.50 லட்சத்திலும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்  கட்டப்பட்டன.

இதற்கான திறப்பு விழா நடந்தது. நகர்மன்ற தலைவர் கீர்த்திகா தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் எம்ஏஎம் முனியசாமி, நகர்மன்ற துணை தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் தங்கப்பாண்டி வரவேற்றார்.

கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்து பேசுகையில், சட்டமன்ற நிதி தொகுதி முழுவதும் பிரித்து முறை யாக வழங்கப்பட்டு வருகி றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பட்டப்படிப்பில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடந்த ஒரே ஆண்டில் 3 கல்லூரிகளை தமிழக அரசு வழங்கியது. தற்போது கல்லூரியில் வகுப்பறை கட்ட ரூ.4.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களும் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட உள்ளன.

காட்டுபரமக்குடி முதல் காக்காதோப்பு வரை வைகை ஆற்றின் கரையோரத்தில் ரூ.6.73 கோடியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது என்றார்.

ஒன்றிய செயலாளர் முத்தையா, இலக்கிய அணி செயலாளர் திலகர், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் நாகராஜன், ஆவின் துணை தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.

 

உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம்

Print PDF

தினமணி             25.01.2014 

உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் தரம் வாய்ந்த மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு இடம் தேர்வு செய்து அமைக்கவேண்டும் என்று மாநகராட்சி கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு கல்விக் குழுத் தலைவர் கே.சூரியாச்சாரி தலைமை தாங்கினார். ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

வேலூர் மாநகராட்சி பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டுவது, வேலூர் சத்துவாச்சாரி மனமகிழ் மன்றத்தைத் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது, மாநகராட்சி அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக் கல்லூரி, சத்துவாச்சாரி உள்ளிட்ட இடங்களில் இடம் தேர்வு செய்ய விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணையம் மூலம் நடவடிக்கை எடுப்பது, பலவன்சாத்து பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக் கட்டடம் மிகவும் சீர்கெட்டுள்ளதை அடுத்து அதை முழுமையாக அகற்றி ரூ.15 லட்சத்தில் புதியக் கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம்

Print PDF

தினமணி             25.01.2014

ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம்

ரூ. 9.9 கோடியில் திரு.வி.க. நகர் ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மான விவரம்: திரு.வி.க. மண்டலம் 73-வது வார்டு ஸ்டீபன்சன் சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டப்படும். இதற்கு ரூ. 9.9 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதி மாநகராட்சி ஆணையரின் நிர்வாக அனுமதி பெறப்பட்ட பின்னர் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தப் பணி, பாலங்கள் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும்.

 


Page 10 of 238