Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரிப்பன் கட்டட புனரமைப்புக்கு மேலும் ரூ. 7.35 கோடி

Print PDF

தினமணி             25.01.2014

ரிப்பன் கட்டட புனரமைப்புக்கு மேலும் ரூ. 7.35 கோடி

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ. 7.35 கோடி செலவிட மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நோக்குடன், கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்படாத காரணத்தினால், இதுவரை கட்டடத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவில்லை. பணிகள் முடிவடைய பல மாதங்களாகும் நிலை உள்ளது. இந்த நிலையில் கட்டட புனரமைப்புப் பணிகளுக்கு கூடுதலாக ரூ. 7.35 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பணிகள் விரைந்து முடிக்கப்படும்: இந்த தீர்மானத்தின் மீது பேசிய 117-வது வார்டு உறுப்பினர் சின்னய்யன், இப்போது கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பணிகள் முடிக்கப்படும் தேதி குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை. புனரமைப்புப் பணிகள் எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மேயர் சைதை துரைசாமி, கடுக்காய், வெண் முட்டைக் கரு ஆகியவை கலந்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதே முறையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் ஈடுபட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும், பணி செய்யும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் பணியை பிரித்து வழங்கியும், கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டும் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

பல்லாவரம், பம்மல் நகராட்சிகளில் ரூ.143 கோடியில் குடிநீர் திட்ட தொடக்க விழா

Print PDF

தினமணி            24.01.2014   

பல்லாவரம், பம்மல் நகராட்சிகளில் ரூ.143 கோடியில் குடிநீர் திட்ட தொடக்க விழா

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

சென்னையை அடுத்த பல்லாவரம்,பம்மல் நகராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.143 கோடி செலவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத் தொடக்க விழா பல்லாவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் கீழ்கட்டளையில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியது: பல்லாவரம் நகராட்சியின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் இத்திட்டத்தின் மூலம் தினமும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2.90 கோடி லிட்டர் குடிநீர் பெற்று,விநியோகம் செய்யும் வகையில் ரூ.99.50 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட அனைத்து பழைய குடிநீர்க் குழாய்களையும் அப்புறப்படுத்தி விட்டு,210கி.மீ நீளத்திற்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் 135 லிட்டர் குடிநீர் பெற முடியும் என்றார்.

பின்னர் பம்மல் நகராட்சி சங்கர் நகரில் ரூ.43.10 கோடி செலவில் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறும் திட்டத்துக்காகக் கட்டவிருக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கான பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,பல்லாவரம் எம்.எல்.ஏ. பி.தன்சிங்,நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே,குடிநீர் வடிகால் வாரியம் மேலாண் இயக்குநர் சந்திரமோகன், தாமஸ்மலை ஒன்றியத் தலைவர் என்.சி.கிருஷ்ணன்,பல்லாவரம்,பம்மல் நகர்மன்றத் தலைவர்கள் நிசார் அகமது,இளங்கோவன்,துணை தலைவர்கள் டி.ஜெயபிரகாஷ்,அப்பு வெங்கடேசன்,ஆணையர்கள் ராமமூர்த்தி,ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

சென்னையை அடுத்த பல்லாவரம்,பம்மல் நகராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.143 கோடி செலவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத் தொடக்க விழா பல்லாவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் கீழ்கட்டளையில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியது: பல்லாவரம் நகராட்சியின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் இத்திட்டத்தின் மூலம் தினமும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2.90 கோடி லிட்டர் குடிநீர் பெற்று,விநியோகம் செய்யும் வகையில் ரூ.99.50 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட அனைத்து பழைய குடிநீர்க் குழாய்களையும் அப்புறப்படுத்தி விட்டு,210கி.மீ நீளத்திற்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் 135 லிட்டர் குடிநீர் பெற முடியும் என்றார்.

பின்னர் பம்மல் நகராட்சி சங்கர் நகரில் ரூ.43.10 கோடி செலவில் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறும் திட்டத்துக்காகக் கட்டவிருக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கான பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,பல்லாவரம் எம்.எல்.ஏ. பி.தன்சிங்,நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, குடிநீர் வடிகால் வாரியம் மேலாண் இயக்குநர் சந்திரமோகன், தாமஸ்மலை ஒன்றியத் தலைவர் என்.சி.கிருஷ்ணன், பல்லாவரம்,பம்மல் நகர்மன்றத் தலைவர்கள் நிசார் அகமது, இளங்கோவன், துணை தலைவர்கள் டி.ஜெயபிரகாஷ்,அப்பு வெங்கடேசன்,ஆணையர்கள் ராமமூர்த்தி,ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பரமக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி            24.01.2014 

பரமக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ 60.5 லட்சத்தில் 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் புதன்கிழமை திறந்து வைத்தார்.

 பரமக்குடி நகர்பகுதியில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்திட ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வாரச்சந்தை பகுதியில் ரூ.10 லட்சத்திலும், முத்தாலம்மன் கோயில் படித்துறை பகுதியில் ரூ.10 லட்சத்திலும், கோகுலர் தெருவில் ரூ.10 லட்சத்திலும், மஞ்சள்பட்டினம் மேற்கு பகுதியில் ரூ. 10 லட்சத்திலும், வைகை நகர் பகுதியில் ரூ.14.50 லட்சத்திலும், எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் ரூ.6 லட்சத்திலும் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டன.

 இவ்விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான எம்.ஏ.முனியசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் ஜி.தங்கப்பாண்டியன் வரவேற்றார்.

 அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை திறந்து வைத்துப் பேசியதாவது: பரமக்குடி நகராட்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 6 இடங்களில் ரூ. 60.5 லட்சத்தில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 5 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் விரிவாக்கப் பணிக்காக ரூ. 2.50 கோடி ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டுள்ளது என அவர் பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள்  பலர் கலந்துகொண்டனர்.

Page 11 of 238