Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மயிலாடுதுறை நகராட்சிக்கு குப்பை அள்ளும் டிராக்டர்

Print PDF

தினகரன்             22.01.2014 

மயிலாடுதுறை நகராட்சிக்கு குப்பை அள்ளும் டிராக்டர்

மயிலாடுதுறை, : நாகை மாவட்டம் மயிலாடு றை நகராட்சிக்கு எம்பி நிதியிலிருந்து டிராக்டர் வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடந்தது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக குப்பை அள்ளும் டிராக்டரை மாநிலங்களை எம்பி மணிசங்கர் அய்யர் வழங்கினார். நகர்மன்ற தலைவர் பவானி சீனிவாசன், துணைத்தலைவர் குண்டாமணி செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ஈரோடு மாநகராட்சியில் ரூ.2.28 கோடியில் சாலை, மழை நீர் வடிகால் பணிக்கு பூஜை

Print PDF

தினமணி             21.01.2014 

ஈரோடு மாநகராட்சியில் ரூ.2.28 கோடியில் சாலை, மழை நீர் வடிகால் பணிக்கு பூஜை

ஈரோடு மாநகராட்சியில் ரூ.2.28 கோடியில் தார்ச் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

 இந்நிகழ்ச்சிகளுக்கு மேயர் ப.மல்லிகா பரமசிவம் தலைமை வகித்தார். துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.

 46-வது வார்டுக்குள்பட்ட சரவணபவ நகரில் ரூ.40 லட்சத்திலும், பாரதிபாளையம் முதல் வீதி, நல்லதம்பி நகரில் ரூ.39 லட்சத்திலும், திருவள்ளுவர் நகர், நிட் இந்தியா பகுதியில் ரூ.40 லட்சத்திலும், 47-வது வார்டுக்குள்பட்ட வசந்தம் நகரில் ரூ.39 லட்சத்திலும், பாரதி நகர் 2-வது வீதி, முதல் வீதி குறுக்கு சாலைகளில் ரூ.36 லட்சத்திலும், பாரதி நகர் 3-வது வீதி மற்றும் 7-வது வீதி குறுக்கு சாலைகளில் ரூ.34 லட்சத்திலும் மழை நீர் வடிகால் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க மொத்தம் ரூ.2.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. மண்டலத் தலைவர்கள் இரா.மனோகரன், காஞ்சனா பழனிசாமி, மாமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

குடியாத்தம் நகராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை

Print PDF

தினமணி             21.01.2014 

குடியாத்தம் நகராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை

குடியாத்தம் நகராட்சி சார்பில், சுண்ணாம்புபேட்டை மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

 தமிழக அரசின் கட்டமைப்பு இடை நிரப்புதல் திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சத்தில், இங்கு நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை நிகழ்ச்சியாக அரசு மருத்துவமனையில் சில நாள்களாக வைக்கப்பட்டிருந்த ஒரு அனாதை ஆணின் சடலம் எரிக்கப்பட்டது.

சோதனையின்போது, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி, அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, நகர்மன்ற உறுப்பினர் வசந்தா ஆறுமுகம், முன்னாள் உறுப்பினர் வி.இ. கருணா, நகர்நல அலுவலர் நளினாதேவி, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

 இதன் செயல்பாடு குறித்து, அதை அமைத்த குட் கேர் என்விரோ சிஸ்டம் நிறுவனத்தின் பொறியாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் ஒரு பகுதியில் விறகு கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி வைத்து எரிக்கப்படும். அந்த நெருப்பிலிருந்து ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன், மீத்தேன் ஆகிய வாயுக்கள் உருவாகும்.

 அதில் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடை பிரித்தெடுத்து விட்டு, மற்ற வாயுக்களை ஜுவாலையாக்கி குழாய்கள் மூலம் சடலத்தின் மீது செலுத்தினால் அது அரை மணி நேரத்தில் சாம்பலாகி விடும்.

இந்த செயல்பாட்டின்போது, ஏற்படும் புகை சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது என்றார்.

தகன மேடையின் செயல்பாடு குறித்து நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம் கூறியது: இந்த தகன மேடை நகர்மன்றத்தின் ஒப்புதல் பெற்று, ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அந்த நிறுவனம் தகன மேடையின் செயல்பாட்டை நிர்வகிக்கும். இந்த தகன மேடையின் நிர்வாகச் செலவுகளுக்கேற்ப சடலத்தை எரிக்க கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றார்.

 


Page 15 of 238