Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம்

Print PDF

தினமணி            13.01.2014

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம்

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாநில அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் தலைமை வகித்தார்.

பேருந்து நிலையம் கட்டும் பணியைத் தொடக்கிவைத்து அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட கொங்கணாபுரத்தில் ஏராளமான அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பரமத்திவேலூர் பகுதியில் இருந்து ஓமலூர் வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை கொங்கணாபுரம் வழியாகச் செயல்படுத்தவுள்ளது.

எடப்பாடி அரசுக் கல்லூரிக்கு கட்டங்கள் கட்ட ரூ.7.5 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ். செம்மலை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கரட்டூர் கே.மணி, எடப்பாடி நகர்மன்றத் தலைவர் கதிரேசன், பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பழனியம்மாள், செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், பேரூராட்சி பகுதியில் குப்பைகளை அகற்ற ரூ.15 லட்சத்தில் புதிய டிப்பர் லாரியை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும்,புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு சுகாதார வளாகங்களையும், புதிய வணிக வளாகத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

 

பள்ளி வகுப்பறை கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

Print PDF

தினகரன்            10.01.2014

பள்ளி வகுப்பறை கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

அனுப்பர்பாளையம், :திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ரூ.45.75 லட்சம் செலவில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பங்கேற்று பணிகளைத் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி திட்டத்ததின் கீழ், வார்டு எண் 20,25,26,28, ஆகிய பகுதிகளில் பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், நியாயவிலைக்கடை கட்டுதல், புதிய அங்கண்வாடி மையக்கட்டிடம் கட்டுதல் ஆகியப் பணிகள் ரூ.45.75 லட்சம் செலவில் நடைபெற உள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், மண்டலத்தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், இரண்டாவது மண்டல உதவி ஆணையர் வாசுகுமார், பொறியாளர் கௌரிசங்கர், சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் போயம்பாளையம் விஜயகுமார், உமாமகேசுவரி, முத்து, ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

Print PDF

தினமணி           10.01.2014

பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

சோளிங்கர் பேரூராட்சியில் உள்ள பழமை வாய்ந்த அப்பங்கார குளத்தை நபார்டு திட்டம் மற்றும் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ1.12 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைத்து பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை வேலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் ராஜா ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது சோளிங்கர் செயல் அலுவலர் தயாளன், பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.விஜயன், செயற்பொறியாளர் சந்தோஷ், மன்ற உறுப்பினர்கள் பிரியதர்ஷினி, மணிகண்டன், சுரேஷ், சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 


Page 17 of 238