Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.3.20 லட்சத்தில் 4 குடிநீர்த் தொட்டிகள்

Print PDF

தினமணி           10.01.2014

ரூ.3.20 லட்சத்தில் 4 குடிநீர்த் தொட்டிகள்

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 4 குடிநீர்த் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டன.

ஆம்பூர் நகரம் 1-வது வார்டு மோட்டுக் கொல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 4 குடிநீர்த் தொட்டிகளை எம்எல்ஏ  அ.அஸ்லம் பாஷா திறந்து வைத்தார்.   நகரமன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், நகரமன்ற உறுப்பினர் அமீன், துப்புரவு அலுவலர் பாஸ்கர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் வி.ஆர்.நசீர் அஹ்மத், நகரச் செயலர் ஹமீத், தமுமுக நகரச் செயலர் தப்ரேஸ் அஹ்மத், நபில் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

மாங்காடு பேரூராட்சியில் குப்பைகளை அகற்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன வாகனம்

Print PDF

தினமணி           10.01.2014

மாங்காடு பேரூராட்சியில் குப்பைகளை அகற்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன வாகனம்

மாங்காடு பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றும் பணியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன வாகனம் ஈடுபடுத்தப்படவுள்ளது.

குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது மாங்காடு பேரூராட்சி. இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.

இந்த பேரூராட்சியில் நாளொன்றுக்கு 12 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இங்கு குப்பைகள் அகற்றும் பணியில் தனியார் மூலம் 34 ஊழியர்களும், பேரூராட்சி மூலம் 21 ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த பேரூராட்சியில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே ரூ.1.25 லட்சம் மதிப்பில் நவீன அரவை இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குப்பைகளை அகற்ற பேரூராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாங்காடு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:

கோயில் பகுதியான மாங்காடு பேரூராட்சியை குப்பையில்லா நகரமாக உருவாக்க, பேரூராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழக அரசின் பகுதி-2 திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீனக் குப்பை அள்ளும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளொன்றுக்கு 15 டன் குப்பைகளை அகற்ற முடியும் என்றார் அவர்.

 

பெருந்துறையில் ரூ.47.05 லட்சம் திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி               08.01.2014

பெருந்துறையில் ரூ.47.05 லட்சம் திட்டப் பணிகள் துவக்கம்

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, பெருந்துறை அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் புதிய திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் பவானி பிரதான சாலை முதல் வழுவுக்காடு பிரதான வீதி இறுதி வரை ரூ.8 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய தார்ச் சாலை புதுப்பிக்கும் பணி, பாண்டியன்வீதி முதல் வழுவுக்காடு வரை ரூ.7.6 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய தார்ச் சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்தின்கீழ், பெருந்துறை அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணி உள்பட மொத்தம் ரூ.47.05 மதிப்பிலான 7 புதிய திட்டப் பணிகளை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் எஸ். பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன், வெட்டையங்கிணறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் திங்களூர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 18 of 238