Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்துக்கு விரைவில் டெண்டர்: மாநகராட்சி ஆணையாளர் தகவல்

Print PDF

தி இந்து          12.04.2017

கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்துக்கு விரைவில் டெண்டர்: மாநகராட்சி ஆணையாளர் தகவல்

மல்டிவெவல் பார்க்கிங்’ திட்டம். (கோப்பு படம்)
மல்டிவெவல் பார்க்கிங்’ திட்டம். (கோப்பு படம்)

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கோவை மாநகராட்சியில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ (பலமுனை வாகன நிறுத்துமிடங்கள்) திட்டத்தை தொடங்க, 15 நாட்களில் டெண்டர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கெனவே 20 லட்சம் வாகனங்களுக்கு மேல் இயங்கும் நிலையில், ஆண்டுதோறும் புதிதாக 1.5 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதுதவிர, கல்வி, தொழில், வியாபாரம், மருத்துவம் உள்ளிட்டவற்றுக்காக தினமும் ஏராளமான வாகனங்களில் சுமார் 2 லட்சம் பேர் கோவைக்கு வருகின்றனர்.

அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, நஞ்சப்பா சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வர்த்தக மையங்கள் அதிகம் நிறைந்துள்ள கிராஸ் கட் சாலை, டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பண்டிகை, திருவிழாக்களின்போதும், வார இறுதி நாட்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போதுமான இட வசதி இல்லை.

சில இடங்களில், தனியார் நிறுவனங்கள் வாகன நிறுத்தும் இடங்களை ஏற்படுத்தி இருந தாலும், வர்த்தக நிறுவனங்கள் வாகன நிறுத்தும் இடங்களை அமைக்காததால், சாலையோரங் களிலேயே வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன. இதனால், கோவை மாநகராட்சியில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து, 2014-ல் தனியார் பங்களிப்புடன் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், டவுன்ஹால் பகுதி களில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்தப்படும் என்று, அப் போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தினர், ‘மல்டிலெவல் பார்க்கிங்’ அமைய உள்ள இடங்களை ஆய்வு செய்தனர்.

ரூ.80 கோடி மதிப்பில்

இதற்கிடையே, காந்திபுரம் கிராஸ் கட் சாலை, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலை, டவுன்ஹால் ஆகிய பகு திகளில் ரூ.80 கோடி மதிப்பில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ அமைக் கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று, சமீபத்தில் மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையர்களுடன் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

30 ஆண்டுகளுக்கு உரிமம்

இத்திட்டத்துக்கு உடனடியாக டெண்டர் விட்டு, பணிகளைத் தொடங்குமாறு நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ரூ.80 கோடி மதிப்பில் 3 இடங் களில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்தைச் செயல்படுத்த, இன்னும் 15 நாட்களில் டெண்டர் விடப்படும். இத்திட்டத்துக்கு மாநகராட்சி இடம் ஒதுக்கி ஒப்புதல் அளிக்கும்.

தனியார் மூலமாக கட்டுமானப் பணிகள் நடைபெறும். அவர்களே அதை பராமரித்து, வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர், மாநகராட்சிவசம் ஒப்படைப்பர். இதில், அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படும்.

வாகனங்களை நிறுத்துவது, அதற்கான ரசீது அளிப்பது உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும். ஒப்பந்ததாரருக்கு வரும் வருவா யில், குறிப்பிட்ட பகுதியை மாநக ராட்சிக்குச் செலுத்த வேண்டும். இத்திட்டம் மூலமாக, கோவை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

 

கோவை மாநகராட்சி பகுதிகளில் ரூ.80 கோடியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம்

Print PDF

தி இந்து     23.03.2017

கோவை மாநகராட்சி பகுதிகளில் ரூ.80 கோடியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம்

கோவையில் ரூ.80 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பட்ஜெட்டை தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காந்திபுரம் கிராஸ்கட் சாலை, ஆர்.எஸ்.புரம், திவான் பகதூர் சாலை, டவுன்ஹால் பகுதிகளில் அதிக வாகனங்களை நிறுத்தும் வகையில் ரூ.80 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.200 கோடி நிதி ஒதுக்க உள்ளன. குளங்களைச் சீரமைத்தல் உள் ளிட்ட பல்வேறு பணிகள் இதில் மேற்கொள்ளப்படும். குப்பையை அள்ளுவதற்காக சென்சார் அடிப் படையில் செயல்படும் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும்.

குடிநீர் விநியோகம்

குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தில் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 97 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிவடையும்.

மேலும், அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு நிதி ரூ.5.48 கோடி மூலம் குடிநீர் விநியோகப் பணிகள் மேற் கொள்ளப்படும். இதுதவிர, பில்லூர் 3-ம் திட்டத்தை செயல்படுத்துவதற் காக புதிய திட்ட வரைவைத் தருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்ட வரைவுக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன், பணிகள் தொடங் கும். மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 170 முதல் 180 எம்.எல்.டி. வரை தண்ணீர் விநியோகிக்கிறோம். தற்போது 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது. இதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி

உக்கடத்தில் கட்டிடக் கழிவு களை மறுசுழற்சி செய்வதற்காக மறுசுழற்சிக் கூடம் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்திலேயே கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக அமைக்கப்படும் முதல் கூடமாக இது இருக்கும். இதனால், கோவையில் உள்ள நீர்நிலைகளில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவது பெருமளவு குறையும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குச் சொந்தமான 8 குளங்களைச் சீரமைப்பது, மாதிரி சாலைகள் அமைத்தல், வை-ஃபை வசதி, மின் விளக்குகள், அம்ரூத் திட்டத்தின்கீழ் பூங்காக்களை மேம்படுத்துவது, 22 மாநகராட்சிப் பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.

வாடகை சைக்கிள் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சைக்கிள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, குறிப்பிட்ட இடங்களில் வாடகை சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்படும். சைக்கிள் தேவைப்படுவோர் வாடகை செலுத்தி சைக்கிளைப் பெற்றுச் செல்லலாம். அவர்கள் செல்லும் இடத்துக்கு அருகில் உள்ள இடத்தில் அந்த சைக்கிளை விட்டுவிடலாம். ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மூலம் சைக்கிள்கள் கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தை ரூ.38 கோடி மதிப்பில் செயல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

 

சென்னை மாநகர் கட்டமைப்புக்கு 5 ஆண்டுகளில் ரூ.294 கோடி ஒதுக்கீடு: மேயர் சைதை துரைசாமி

Print PDF

தினமணி     31.07.2016 

சென்னை மாநகர் கட்டமைப்புக்கு 5 ஆண்டுகளில் ரூ.294 கோடி ஒதுக்கீடு: மேயர் சைதை துரைசாமி

 சென்னை மாநகரின் அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.294.28 கோடி ரூபாய் ஒதுக்கி செய்யப்பட்டு 71 பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

சென்னை ரிப்பன் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் திமுக மேயர் பொறுப்பில் இருந்த காலங்களில் பல பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும். ஆனால், அதிமுக காலத்தில் பணிகள் ஏதும் நடக்காதது போலவும் திமுகினர் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில்  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  கால்வாய்களின் குறுக்கேவும் ரயில்வே கிராஸிங்குகளை கடப்பதற்கும் பல்வேறு பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. 

2006  முதல் 2011 வரை மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட 46 பணிகளில்,  22 அறிவிப்புகளில் இடம்பெற்ற பணிகள் கைவிடப்பட்டது. 9 அறிவிப்பில் இடம்பெற்ற பணிகள்  முடிக்கப்படவில்லை.  

மொத்தம் 15 பணிகள்  மட்டுமே முடிக்கப்பட்டது. 

2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 37 பாலப்பணிகள் ரூ.114.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன.

இப்போது 21 பாலப் பணிகள் ரூ. 21.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

அவை ரூ.10.03 கோடி மதிப்பீட்டில் கோடம்பாக்கம் மேம்பாலத்தினை பழுது பார்த்து மேம்படுத்தும் பணியில் முக்கிய பணிகள் முடிவுற்று, நடைபாதை, படிக்கட்டுகள் மற்றும் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த மேம்பாலம்: கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் அனைத்தும் குறுகிய கால திட்டமிட்டதின் பலனாக தனித்தனி சந்திப்புகளில் தனித்தனி பாலங்கள் கட்டப்பட்டது. உதாரணமாக எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரத்தில் அமைத்த மேம்பாலத்தை ஒருங்கிணைத்து அண்ணாசாலை முதல் மகாலிங்கபுரம் வரை ஒரே மேம்பாலமாக திட்டமிட்டு கட்டியிருந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும்.

இதேபோல சர்தார் பட்டேல் சாலை மேம்பாலத்தையும் ஒருங்கிணைத்து ஐ.ஐ.டி. முதல் மத்திய கைலாஷ் கடந்து ராஜீவ்காந்தி சாலையையும் மற்றும் அடையாறு மேம்பாலத்தையும் இணைத்து திட்டமிட்டு கட்டியிருந்தால் இன்றைய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகியிருக்கும்.

புதிய திட்டம்: அண்ணா சாலையில் இருந்து மகாலிங்கபுரம் வழியாக லயோலா கல்லூரி வரை பயணிக்கும் ஒருவர் தங்கு தடையின்றி செல்லவும்  ஈகா தியேட்டர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை தடையற்ற போக்குவரத்திற்கும் என பல சந்திப்புகளை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த மேம்பாலம் திட்டமிடப்பட்டு வருகிறது.முக நிர்வாகத்தால் ஆய்வு செய்து 2007 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட பணியினை  புணரமைக்கப்பட்டு கொளத்தூர் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண் 1 இல் மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானத்திற்கான மதிப்பீடு ரூ. 24.90 கோடிக்கு தயாராக உள்ளது. சேவைத்துறைகளான சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சாரத்துறையின் தளவாடங்களை மாற்றியமைப்பதற்கான மதிப்பீட்டுத் தொகை மற்றும் பாலத்திற்கு தேவையான ஐ.சி.எஃப். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் குறித்து உறுதி செய்யப்பட்ட பின்னர் முழுமையான மதிப்பீடு தயாரித்து விரைவில் ஒப்பங்கள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

மாநகராட்சி 5 ஆண்டுகளில்: செப்டம்பர் 2011 முதல்  ஜீலை 2016 வரை அதாவது 58 294.28 கோடி மதிப்பீட்டில்  மொத்தம் 71 பாலப்பணிகள் (5 பெரிய பாலங்கள், 3 சுரங்கப்பாதைகள் உட்பட) எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 114.95 கோடி மதிப்பீட்டில் 37 பாலங்கள், சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்களை மேம்படுத்தும் பணிகளும்  முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் 21 பாலப்பணிகள் ரூ.21.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. 13 பாலப்பணிகள் ரூ.158.14 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படவுள்ளன என பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் சைதை துரைசாமி.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 238