Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

லாஸ்பேட்டையில்தார் சாலை பணி

Print PDF

தினமலர்             04.02.2014

லாஸ்பேட்டையில்தார் சாலை பணி

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் இரண்டு இடங்களில் தார் சாலை அமைக்கும் பணியை வைத்தியநாதன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.லாஸ்பேட்டை நெசவாளர் நகர் பாண்டியன் வீதியில் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலையும், சாந்தி நகர் பாண்டியன் வீதியில் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.இப்பணியை, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி செயற்பொறியாளர் குணசேகரன், உதவிப் பொறியாளர் கலியவரதன், இளநிலைப் பொறியாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 

திருவான்மியூர் குப்பத்தில் ரூ60 லட்சத்தில் சமூகநல கூடம் கட்ட அடிக்கல்

Print PDF

தினகரன்                31.01.2014

திருவான்மியூர் குப்பத்தில் ரூ60 லட்சத்தில் சமூகநல கூடம் கட்ட அடிக்கல்

துரைப்பாக்கம், : சென்னை மாநகராட்சி 13வது மண்டலம் 181வது வார்டு திருவான்மியூர் குப்பம் பகுதியில் சமூகநலக் கூடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அப்பகுதியில் ரூ60 லட்சம் மதிப்பீட்டில் சமூகநலக்கூடம் அமைக்க பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.

குடிசைமாற்று வாரிய தலைவர் தங்கமுத்து, சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி. ஆகியோர் பூமிபூஜையை தொடங்கி வைத்தனர்.தென்சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் விருகை ரவி, அசோக் எம்.எல்.ஏ, திருவான்மியூர் குப்பம் பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். 

 

வடுகபாளையம் ரேஷன் கடைக்கு ரூ.3¼ லட்சத்தில் புதிய கட்டிடம்

Print PDF

தினத்தந்தி                30.01.2014

வடுகபாளையம் ரேஷன் கடைக்கு ரூ.3¼ லட்சத்தில் புதிய கட்டிடம்

பொள்ளாச்சி வடுகபாளையத்தில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அம்பேத்கார் வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3¼ லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் கிரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நகராட்சி என்ஜினீயர் ராஜா, சூடாமணி கூட்டுறவு சங்க துணை தலைவர் வடுகை கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முத்துகருப்பண்ணசாமி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். முன்னதாக கவுன்சிலர் கவிதா வரவேற்று பேசினார். விழாவில் நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் மார்ட்டின், அ.தி.மு.க. பிரமுகர்கள் முபாரக், அருணாசலம், நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 


Page 7 of 238