Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Master Plan

புதிய மாஸ்டர் பிளானில் பரிந்துரை : போக்குவரத்து பிரச்னை தீர்க்க 2 ரிங் ரோடு, 2 லாரி பேட்டை

Print PDF

தினகரன்      03.02.2011

புதிய மாஸ்டர் பிளானில் பரிந்துரை : போக்குவரத்து பிரச்னை தீர்க்க 2 ரிங் ரோடு, 2 லாரி பேட்டை

கோவை, பிப் 3:

கோவை யின் வளர்ச்சிக்கான புதிய மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையில் போக்குவரத்து பிரச்னை தீர்க்க சுற்றுச்சாலைகள், லாரிகள் நிறுத்துவதற்கு இரண்டு இடங்களில் லாரி பேட்டை என பல்வேறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகர் மற்றும் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் 2021ல் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப தேவையான திட்டங்களுடன் கூடிய 479 பக்கம் கொண்ட புதிய மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்து இறுதி அறிக்கை பின்னர் வெளியிடப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு மாஸ்டர் பிளானில் கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் சில ஏற்கனவே செயலாக்கம் பெற்றுள்ளன. மேலும் புதிய திட்டங்கள் தேவைப்படுகின்றன.

மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* கோவை மாநகரின் மக்கள் தொகை வரும் 2021ல் 21.46 லட்சமாக இருக்கும்.

குடியிருப்பு பரப்பு 73 சதவீதமாக இருக்கும்

நீலம்பூர்& வாளையார் பைபாஸ்

எக்ஸ்பிரஸ் ரோடாக மாற்ற பரிந்துரை

கோவை மாஸ்டர் பிளானில் சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. தற்போது கேரளா செல்லும் வாகனங்கள் செல்வதற்கு கொச்சி&சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நீலம்பூரில் இருந்து வாளையார் வரையில் தற்போது நான்கு வழிச்சாலை உள்ளது. இதை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த சாலையை எக்ஸ்பிரஸ் சாலையாக தரம் உயர்த்தவேண்டும். அதேபோல் இந்த சாலையின் இரு புறமும் அருகாமையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது என மாஸ்டர் பிளானில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* குடியிருப்பு பகுதிகளுக்கான பயன்பாடு மொத்த நிலப்பரப்பில் மாநகர பகுதியில் 73.27 சதவீதமாகவும், மாநகரம் அல்லாத உள்ளூர் திட்டக்குழும எல்லைக்குட்பட்ட பகுதியின் மொத்த நிலப்பரப்பில் 71.59 சதவீதமாகவும் இருக்கவேண்டும். 2002ம் ஆண்டில் குடியிருப்பு விகிதம் 57.37 சதவீதமாக இருந்தது.

* மாநகரில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு முக்கிய சாலைகளை இணைக்க இணைப்பு சாலைகள், வெளி வட்ட புறவழிச்சாலை, உள்வட்ட புறவழிச்சாலைகள் தேவை. நவ இந்தியா ரோட்டை அவிநாசி ரோட்டுடன் இணைக்கும் இணைப்பு சாலை 60 அடி அகலத்தில் அமைக்கவேண்டும்.

* கோவை மாநகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதியான தடாகம் ரோட்டுக்கு செல்ல உக்கடம்&செல்வபுரம் புறவழிச்சாலையில் இருந்து குமாரபாளையம், தெலுங்குபாளையம் வழியாக வேலாண்டிபாளையத்தில் தடாகம் ரோட்டில் இணைக்கும் வகையில் ஒரு இணைப்பு சாலை ஏற்படுத்தவேண்டும். சத்தியமங்கலம் ரோட்டையும்& அவிநாசி ரோட்டையும் இணைக்க விளாங்குறிச்சி வழியாக இணைப்பு சாலை ஏற்படுத்தவேண்டும். அதேபோல் வாலாங்குளம் புறவழிச்சாலையில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலை அமைக்கவேண்டும்.

* அவிநாசி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டை இணைப்பதற்கு நிலம்பூர், மைலம்பட்டி, வெள்ளானைப்பட்டி, காளப்பட்டி, சர்க்கார் சாமக்குளம், கொண்டையம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் வழியாக வெளிவட்ட புறவழிச்சாலை அமைக்கவேண்டும். இந்த வெளிவட்ட சாலை 100 அடி அகலத்தில் அமைக்கவேண்டும். அதேபோல் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து பன்னிமடை, பேரூர், கோவைப்புதூர் வழியாக குனியமுத்தூரில் பாலக்காடு ரோட்டை இணைக் கும் உள்வட்ட புறவழிச்சாலை 100 அடி அகலத்தில் அமைக்கவேண்டும். அவிநாசி ரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு இடிகரை, கீரணத்தம், வெள்ளக்கிணறு வழியாக 80 அடி அகலம் கொண்ட இணைப்பு சாலை தேவை.

* கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க முக்கிய சாலை சந்திப்புகளான உக்கடம் ஒப்பணக்கார வீதி(சோபா கார்னர்), காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் , அவிநாசி ரோட்டில் கிருஷ்ணம்மாள் கல்லூரி ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கவேண்டும்.
* ரயில் பாதை கடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு ஆவரம்பாளையம், விளாங்குறிச்சி, ரத்தினபுரி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் ஏற்படுத்தவேண்டும்.

* சரக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக கருமத்தம்பட்டி, போளூவாம்பட்டி ஆகிய இடங்களில் லாரி பேட்டை(டிரக் டெர்மினல்) அமைக்கவேண்டும்.
* பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வடவள்ளி, மதுக்கரை ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கவேண்டும்.

இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் புதிய மாஸ்டர் பிளானில் இடம் பெற்றுள்ளன. 
 

மாநகரில் மாசு தொழில்களுக்கு தடை வார்ப்பட தொழிலுக்கு 2 துணை நகரம் : மாஸ்டர் பிளானில் பரிந்துரை

Print PDF
தினகரன்      03.02.2011

மாநகரில் மாசு தொழில்களுக்கு தடை வார்ப்பட தொழிலுக்கு 2 துணை நகரம் : மாஸ்டர் பிளானில் பரிந்துரை

கோவை, பிப் 3:

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மாநகர குடியிருப்பு பகுதியில் அமைக்க தடை விதிக்கவேண்டும். வார்ப்பட தொழிலுக்கு மாநகருக்கு வெளியே அரசூர், குன்னத்தூர் ஆகிய இடங்களில் தனியே துணை தொழில் நகரங்கள் அமைக்கவேண்டும் என்று கோவை மாஸ்டர் பிளான் வரைவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜவுளி, பொறியியல் சார் தொழில்களில் கோவை மாநகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயத்தில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் இந்த தொழில்களை பாதிக்கும் முக்கிய அம்சங்களாக உள்ளன. 2021ல் கோவையின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நேற்று வெளியிடப்பட்ட மாஸ்டர் பிளானில் பல்வேறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டுக்கான பரிந்துரையில் ஒரு நகரில் தொழில் பயன்பாட்டுக்கான நிலம் ஒதுக்கீடு 12 சதவீதமாக இருக்கவேண்டும். ஆனால், கோவையில் தொழில் பயன்பாட்டு ஒதுக்கீடு தற்போது 7.79 சதவீதமாக உள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான நிலம் தற்போது மாநகர எல்லையில் 1,529 ஹெக்டேராகவும், உள்ளூர் திட்டக்குழும பகுதியில் 6,635 ஹெக்டேராகவும் உள்ளது. இதை மேலும் குறையாமல் பாதுகாக்கவேண்டும்.

இதை வரும் 2021க்குள் 12 சதவீதமாக அதிகரிக்கவேண்டும். அதே சமயத்தில் தொழில் வளர்ச்சிக்காக தனி மனிதர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் தவிர்ப்பதும், அதற்கேற்ப தொழில் கட்டமைப்புகளுக்கு மாற்று திட்டங்களின் அவசியமும் மாஸ்டர் பிளான் பரிந்துரை செய்துள்ளது.

கோவை மாநகரின் மொத்த நிலப்பரப்பில் தொழில் செய்வதற்கான நிலங்கள் பயன்பாடு 721.38 ஹெக்டேராகவும், மாநகருக்கு வெளியே உள்ளூர் திட்டக்குழும எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலை நிலப்பயன்பாடு 9215 ஹெக்டேராகவும் இருக்கவேண்டும். இதில் கட்டுப்பாட்டுக்குட்பட்ட தொழிற்சாலைகள், பொது தொழிற்சாலைகள், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு என்று தனி இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏற்ற பகுதிகளாக கருமத்தம்பட்டி, சோமனூர், சூலூர், அன்னூர், வெள்ளானைப்பட்டி, அரசூர், ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம் ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் கட்டுப்பாட்டுக்குட்பட்ட தொழிற்சாலைகள்(கண்ட்ரோல் இண்டஸ்ட்ரீஸ்), பொது தொழிற்சாலைக்கான இடங்கள் ஆகும். சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகம் தரக்கூடிய வார்ப்பட தொழில்களுக்கு(பவுண்டரி) தனியே துணை தொழில் நகரங்கள் அவசியம். வார்ப்பட தொழில்களின் தற்போதைய சூழல், கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அவிநாசி ரோட்டில் அரசூர், சத்தியமங்கலம் ரோட்டில் குன்னத்தூர் ஆகியன வார்ப்பட தொழில் நகரங்கள் அமைப்பதற்கு ஏற்ற இடங்கள். இங்கு வார்ப்பட தொழில்பேட்டைகள் அமைக்கவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு நிலம் தேவை உள்ளது. அதற்கு ஏற்ப நிலம்பூர் பகுதியில் போதிய நிலங்களை கையகப்படுத்தி நில வங்கி அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

புதிய மாஸ்டர் பிளான் தயாராகிறது மதுரையை சுற்றி 725 ச.கி.மீ. பரப்பளவில் நிலத்தின் பயன்பாடு மாறுவதால் விதிமுறைகளில் மாற்றம்

Print PDF

தினகரன்       24.01.2011

புதிய மாஸ்டர் பிளான் தயாராகிறது மதுரையை சுற்றி 725 ச.கி.மீ. பரப்பளவில் நிலத்தின் பயன்பாடு மாறுவதால் விதிமுறைகளில் மாற்றம்


மதுரை, ஜன. 24:

மதுரை உள்ளுர் திட்டக்குழும பகுதி 725 சதுர கி.மீ. பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், புதிய மாஸ்டர் பிளான் தயாராகிறது. நிலத்தின் பயன்பாடு மாறுவதால் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது.

மதுரை மாநகராட்சி எல்லை 52 சதுர கி.மீ. பரப்பளவில் இருந்து 148 ச.கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்பட்டு, வரும் அக்டோபர் முதல் அமலாகிறது. இதேபோல் மதுரை உள்ளூர் திட்ட குழும பகுதி 725 ச.கி.மீ. பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போதுள்ள மாநகராட்சி பகுதியுடன் திருமங்கலம், ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், உசிலம்பட்டி, நகராட்சிகள், விளாங்குடி, ஆர்வி.பட்டி, திருநகர், பரவை, சோழவந்தான் பேரூராட்சிகள், தாமரைப்பட்டி, திருமோகூர், தண்டலை, சிலைமான், கீழடி, கொந்தகை, காரியாபட்டி உள்ளிட்ட 171 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்கள் அனுமதி அளிப்பதில் மதுரையில் 1993ம் ஆண்டு மாஸ்டர் பிளான் நடைமுறையில் உள்ளது. மாநகராட்சி எல்லை மற்றும் உள்ளூர் திட்டக்குழும பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளின் எதிர்கால வளர்ச்சி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலத்தின் பயன்பாடு மாறி வருகிறது. குறிப்பாக வயல்வெளிகள் வீட்டு மனைகளாகவும், வர்த்தக கட்டிடங்களாகவும், குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலை பகுதியாகவும், தொழிற்சாலை பகுதி குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டிடங்களாக மாறி வருகின்றன.

அதற்கு ஏற்ற வகையில் 725 ச.கி.மீ. பரப்புக்கு மதுரையின் புதிய மாஸ்டர் பிளான் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தயாராகி உள்ளது. இதன்மூலம் கட்டிட அனுமதி பெறுவது எளிதாக்கப்பட்டு, மதுரையிலேயே அளிக்கப்படும். சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த மாஸ்டர் பிளானில் நகரை சுற்றிலும் வளர்ச்சிக்கு ஏற்ப விதிமுறைகள் உருவாக்கப்படும். மதுரையை சுற்றி அவுட்டர் ரிங்ரோடு திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும் சேர்த்து கொள்ளப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 6