Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க கரசேவை சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் பங்கேற்பு

Print PDF

தினமலர்              19.01.2014

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க கரசேவை சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் பங்கேற்பு

திருப்பூர் : "தினமலர்' நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி எதிரொலியாக, வள்ளலார் நகர் மற்றும் திருக்குமரன் நகர் பகுதிகளில் பரவிக்கிடந்த பாலிதீன் காகிதங்களை, சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் நேற்று அப்புறப்படுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தினமும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. வள்ளலார் நகர் பாறைக்குழியை சுற்றியுள்ள பகுதிகளில், பாலிதீன் கவர்கள் பரவிக்கிடக்கின்றன.

மாநகராட்சி 52வது வார்டில் பரவிக்கிடக்கும் குப்பையால், மழை பெய்தாலும், நிலத்தடி நீர் சேகரமாவது தடுக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பாலிதீன் குப்பையை அகற்ற வேண்டும் என, கடந்த 4ம் தேதி, "தினமலர்' நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது.

சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் சேவை கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர்கள் மூலமாக, பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

திருப்பூர் சத்ய சாயி சேவா நிறுவனங்களை சேர்ந்த 80 பேர், இரண்டு குழுக்களாக பிரிந்து, நேற்று, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.

வள்ளலார் நகர் மற்றும் திருக்குமரன் நகர் சுற்றுப்பகுதிகளில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலியிடங்களில் பரவிக்கிடந்த பாலிதீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

காலை 9.00 மணி முதல், மதியம் 1.00 மணி வரை சேகரிக்கப்பட்ட கழிவுகள், மூட்டையாக கட்டப்பட்டு, பிளாஸ்டிக் ரோடு பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.

 

பொங்கல் திருநாளில் மதுரையில் 2,358 டன் குப்பைகள் அகற்றம்

Print PDF

தினமணி            18.01.2014

பொங்கல் திருநாளில் மதுரையில் 2,358 டன் குப்பைகள் அகற்றம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதியில் 3 நாள்களில் மட்டும் 2,358 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டதாக, ஆணையர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநகராட்சிக்குள்பட்ட 100 வார்டுகளில் தினமும் காம்பாக்டர், பிளைட்டர், டிராக்டர் உள்ளிட்ட 220 வாகனங்கள் மூலம் 550 டன்கள் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளைக்கல்லிலுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உரம் தயாரிக்க எடுத்துச் செல்லப்படுகின்றன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 14 ஆம் தேதி 734 டன்களும், 15 ஆம் தேதி 810 டன்களும், 16 ஆம் தேதி 814 டன்களும் என மொத்தம் 2,358 டன் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்களால் சேகரிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

 

திடக்கழிவு அகற்ற நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாக கட்டணம் வசூல்

Print PDF

தினகரன்           07.01.2014

திடக்கழிவு அகற்ற நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாக கட்டணம் வசூல்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களை முறைப்படுத்தி அந்த நிறுவனங்களில் இருந்து கழிவுகளை சேகரிக்கவும், அதனால் மாநகராட்சிக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைத்திடும் வகையில் நிர்வாக கட்ட ணம் நிர்ணயிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஓட்டல்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், பழக்கடைகளுக்கு சேவை கட்ட ணம் மட்டுமே குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு நிர்வாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் நிர்வாக கட்டணமாக பேக்கரிக்கு 300 ரூபாயும், டீக்கடை மற்றும் பேக்கரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிபன் ஸ்டால்களுக்கு 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும், மெஸ்களுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், உணவு விடுதிகளுக்கு 400 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளுக்கு 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், குளிர்பானம் மற்றும் பழச்சாறு கடைகளுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், பெரிய காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும், சிறிய காய்கறி கடைகள், பழக்கடைகளுக்கு 500 ரூபாயும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும், சிறிய மளிகை கடைகளுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், ஹார்டுவேர் சிறிய கடைகளுக்கு 250 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 750 ரூபாயும் நிர்வாக கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிர்வாக கட்டணம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 


Page 7 of 66