Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

பாலித்தீன் குப்பைக்கு விடிவு :"சூன்யா' திட்டம் விஸ்தரிப்பு

Print PDF

தினமலர்          02.12.2013

பாலித்தீன் குப்பைக்கு விடிவு :"சூன்யா' திட்டம் விஸ்தரிப்பு

கோவை : கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரத்தை தொடர்ந்து, மேலும் நான்கு வார்டுகளில் குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ். புரம் பகுதிகளை உள்ளடங்கிய 23வது வார்டில், குப்பையில்லா நகரத்தை உருவாக்கும் "சூன்யா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அக்., 2ல், "சூன்யா' திட்டத்தில், மக்கள் ஒத்துழைப்போடு குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணி துவங்கப்பட்டது. வார்டிலுள்ள 21 வீதிகளில், மொத்தமுள்ள 4,100 குடியிருப்பிலும் துப்புரவு பணியாளர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வீட்டுக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டாமல், சணல் பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனியாக சேகரிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு சணல் பைகளும், ஒரு பிளாஸ்டிக் தொட்டியும் வழங்கப்பட்டன. துப்புரவு தொழிலாளர்கள் வரும்போது, தரம்பிரித்து சேகரித்து வைத்திருக்கும் குப்பையை ஒப்படைக்க வேண்டும் என, பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.வீடுகளில் சேகரிக்கும் பாலித்தீன் கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் தனியாக சேகரித்து வைத்து, ஐ.டி.சி., என்ற தனியார் நிறுவனத்திடம், கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். பாலித்தீன் கழிவை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை துப்புரவு தொழிலாளர்கள் ஊக்கத்தொகையாக பகிர்ந்து கொள்கின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:

கடந்த இரண்டு மாதத்தில், 6.1 டன் பாலித்தீன் கழிவு சேகரித்து விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துப்புரவு தொழிலாளர்களுக்கு கணிசமான ஊக்கத்தொகை கிடைத்துள்ளது. பொதுமக்களும் விழிப்புணர்வு பெற்றுள்ளதால், பாலித்தீன் கழிவை தரம் பிரித்து ஒப்படைக்கின்றனர். இதேபோன்று, ஒவ்வொரு வார்டிலும் பாலித்தீன் கழிவை தரம் பிரித்து சேரித்து, துப்புரவு தொழிலாளர்கள் ஊக்கத்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தில் 51வது வார்டு, வடக்கு மண்டலத்தில் 44, கிழக்கு மண்டலத்தில் 67, தெற்கு மண்டலத்தில் 90வது வார்டுகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மூன்று நாளில் ஆறு டன் பாலித்தீன் குப்பை சேகரிக்கப்பட்டது.

படிப்படியாக ஒவ்வொரு வார்டிலும் பாலித்தீன் கழிவு தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் துவங்கப்படும். வரும், ஏப்ரல் மாதத்துக்குள் தினமும் 50 டன் பாலித்தீன் கழிவு சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு டிசம்பருக்குள் அனைத்து வார்டிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு 2,500 டன் பாலித்தீன் கழிவு, குப்பை கிடக்குக்கு கொண்டு வரப்படாமல், துப்புரவு தொழிலாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார். மேலும் 4 வார்டுகளில் அமல்.

ஒரு லட்சம் செலவாகும்!

கமிஷனர் லதா கூறுகையில், ""பாலித்தீன் கழிவுகளை வீடுகளில் சொந்த பொறுப்பில் தரம் பிரித்து வைக்க வேண்டும். கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் சேகரிப்பதற்கு, மாநகராட்சி மூலம் 50 கிலோ கொள்ளளவு கொண்ட பை வழங்கப்படும். ஒரு வார்டுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைகள் வழங்கப்படும். ஒட்டுமொத்த மாநகராட்சியிலும் குப்பை சேகரிக்கும் பைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால், குப்பை தரம் பிரிப்பு, போக்குவரத்துக்கு செலவிடப்படும் பல லட்சம் ரூபாய் சேமிக்கப்படும்'' என்றார்.

 

தீபாவளி பட்டாசு கழிவு அதிகரிப்பு மாநகரில் கூடுதலாக 300 டன் குப்பை

Print PDF

தினகரன்             29.11.2013

தீபாவளி பட்டாசு கழிவு அதிகரிப்பு மாநகரில் கூடுதலாக 300 டன் குப்பை

திருப்பூர், : திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் பட்டாசு கழிவுகள் உட்பட 300 டன் அளவுக்கு குப்பைகள் அதிகளவில் சேகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல லட்சம் மக்கள் வசித்து வரும் திருப்பூர் மாநகரில், நாளொன்றுக்கு 28280 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள்தெரிவிக்கின்றன. 60 வார்டுகளிலும் 831 துப்புரவு ஊழியர்களை கொண்டு குப்பைகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தீபாவளி பண்டிகையையொட்டி, லட்சக்கணக்கான பொதுமக்கள் வெளியூர் சென்று விட்டநிலையில், கடந்த 3 நாளில் குப்பைகளின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குப்பைகளின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

 தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் பட்டாசு மற்றும் இதர குப்பை கழிவுகளின் அளவு மிக அதிகமாக இருந்ததாக கூறுகின்றனர்.அவர்கள் கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகரில் தினமும் 28280 டன்னுக்கு குறையாமல் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 3 நாட்களில் இதன் அளவு கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 6280 டன் குப்பை அள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பட்டாசு குப்பை என மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை தலா 100 டன் அடிப்படையில் கிட்டத்தட்ட 300 டன் குப்பை அதிகரித்துள்ளதாகவும் கடந்தாண்டை விட தீபாவளி பட்டாசு கழிவுகளின் அளவு இந்தாண்டு அதிகம் எனவும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே மழை எச்சரிக்கை காரணமாக மாநகரில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனுக்குடன அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சாக்கடை கால்வாய் அடைக்கப்படாத வகையில் பட்டாசு கழிவுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.

 அதன்படி மாநகர் முழுவதும் குப்பைகள் அள்ளும் பணி கடந்த இரு தினங்களாக தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தீபாவளி விடுமுறை காரணமாக சில பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடந்தது.

 

எல்லா கழிவுப்பொருளையும் இயற்கை உரமாக்க வேண்டும்

Print PDF

தினகரன்         26.11.2013

எல்லா கழிவுப்பொருளையும் இயற்கை உரமாக்க வேண்டும்

திருச்சி, : திருச்சி சங் கம் ஓட்டலில் மத்திய பிளா ஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார் பில் பிளாஸ்டிக் கழிவு களை கையாள்வது மற்றும் மறுசுழற்சி செய்வது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து மத் திய உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுப்புராஜ் ஐஏ எஸ் பேசியதாவது:

20ம் நூற்றாண்டின் முக் கிய கண்டுபிடிப்புகளில் பிளாஸ்டிக்கும் ஒன்று. இன்று இந்தியாவில் மட் டும் சராசரியாக நபர் ஒரு வர் நாளொன்றுக்கு சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் பயன்படுத்தி வருகிறார். உலகள வில் ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் பயன்படுத்தும் அளவு மிக குறைவு தான். அன்றாட வாழ்வில் பிளாஸ் டிக் பயன்பாட்டை தவிர்ப் பது கடினம் என்ற அளவு க்கு நம்முடைய பயன்பாட் டில் பிளாஸ்டிக் கலந்து விட்டது. நாம் பயன்படுத் தும் பிளாஸ்டிக்கில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்துபவை பிளாஸ்டிக் பைகள் தான்.

குப்பையில் போடப்ப டும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை, எவ்வாறு இந்த கழிவுகளை கையாள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற் பட வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த பல்வேறு தவறான கருத்துக்கள் மக்களிடம் உள்ளது. அதை போக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 20 நகரங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நட த்தி வருகிறோம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளும் பிளாஸ்டிக் மட்டுமின்றி எல்லா கழிவுபொருட்களையும் இயற்கை உரமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி பேசுகையில், பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பது சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. திருச்சி மாநகராட்சியில் 1,600 துப்புரவு பணியாளர்களை கொண்டு நபர் ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தது 3 கிலோ பிளா ஸ்டிக் கழிவுகளை கண்டறிந்து சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவ் வாறு சேரும் கழிவுகள் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. பிளா ஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகை யில் பல்வேறு நடவடிக்கை களை மாநகராட்சி எடுத்து வருகிறது. மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளு க்கு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேலும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இதைதொடர்ந்து பிளா ஸ்டிக் மறுசுழற்சி குறித்து விளக்கப்படங்கள், கலந்தாய்வு நடந்தது. திருச்சி மாந கர மேயர் ஜெயா, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற் றும் தொழில்நுட்ப மையத் தின் முதன்மை மேலாளர் சுகுமார் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 9 of 66