Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

கட்டடக்கழிவு பிரச்னைக்கு விமோசனம்! ரூ.12 கோடியில் புது திட்டம்

Print PDF

 தினமலர்        19.08.2014

 கட்டடக்கழிவு பிரச்னைக்கு விமோசனம்! ரூ.12 கோடியில் புது திட்டம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
23:51
கோவை : கோவையில் குளக்கரைகளிலும், ரோட்டோரங்களிலும், கட்டடக் கழிவு மண் கொட்டப்படுகிறது. நீண்ட காலமாக நிலவும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 12 கோடி ரூபாயில், கட்டடக் கழிவில் மாற்றுப் பொருள் உற்பத்தி திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கியுள்ளது.

கோவையில் பழைய கட்டடங்களை இடித்து புதுப்பிக்கும் பணிகளும், புதிதாக கட்டடம் கட்டும் பணிகளும் அதிகளவில் நடக்கிறது. இதனால், ஏற்படும் கட்டடக் கழிவை இரவு நேரத்தில், ரோட்டோரத்திலும், குளக்கரைகளிலும் கொட்டுகின்றனர். கட்டடக் கழிவு கொட்டுவதால், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்; போக்குவரத்து பாதிக்கிறது. இந்நிலையில், கோவை மாநகர எல்லைக்குள் கட்டடக் கழிவுகள் கொட்ட, 18 இடங்களை மாநகராட்சி அறிவித்தது. அறிவிப்பை மீறி, குளக்கரை, ரோட்டோரம், குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை கொட்டினால், அபராதம் விதித்து, வாகனங்களையும் பறிமுதல் செய்யப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

கட்டடக் கழிவு கொட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான இடங்கள், பயன்பாடற்ற கிணறுகளாக இருந்தன. பொதுக்கிணற்றில் கட்டடக் கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து, கிணறுகளை பராமரித்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதுக்கப்படும். மக்களின் தேவைக்கேற்ப தண்ணீர் எடுக்க முடியும் என, பொதுநல அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து, பொதுக்கிணறுகளில் கட்டட கழிவுகளை கொட்ட தடை விதித்து, கழிவு மண் கொட்டுவதற்கு மாற்று இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்து, அறிவித்தது. மாநகராட்சி பகுதியில் உள்ள, ஐந்து மண்டலத்திலும் சேர்த்து, ௧௬ இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

கட்டடக் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் கொட்டும்போது, அவற்றை மாநகராட்சி வாகனங்களில் எடுத்து வந்து, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து, மணல், சிறுஜல்லி கற்களை பிரித்தெடுக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக, உக்கடம் கழிவு நீர் பண்ணை அருகிலும், வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பகுதியிலும் கட்டடக் கழிவில் இருந்து மாற்று பொருள் உற்பத்திக்கான மையத்தை தனியார் மூலம் நிறுவ மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் டில்லி, புனே உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, கட்டடக் கழிவுகளில் இருந்து மாற்றுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை பார்வையிட்டு வந்தனர்.இந்நிலையில்,கமிஷனர் லதா, சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கட்டடக் கழிவை மாற்று பொருளாக மாற்றும் திட்டம் பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டம் நிதி, 12 கோடி ரூபாயில், கட்டடக் கழிவை மாற்று பொருளாக மாற்றும் திட்டத்திற்கு, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவையில் வாலாங்குளம் கரையிலும், உக்கடம் பை பாஸ் ரோடு, திருச்சி ரோட்டில் சிங்காநல்லுார் அருகிலும், சரவணம்பட்டி பகுதிகளிலும், பொள்ளாச்சி ரோட்டில் குறிச்சி குளக்கரையிலும் கட்டட கழிவு அத்துமீறி கொட்டப்படுகிறது. இத்திட்டம் எவ்வளவு விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறதோ, அதற்கேற்ப, கட்டட கழிவு பிரச்னைக்கு விமோசனம் கிடைக்கும்.

விரைவில் செயல்வடிவம்!
மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ''கட்டடக் கழிவு மண், குளக்கரை மற்றும் ரோட்டோரத்தில் கொட்டுவதை தடுக்கவும், மாற்று பொருள் உற்பத்தி செய்யவும் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. உக்கடம் கழிவுநீர் பண்ணை இடத்தில் இத்திட்டத்திற்காக 10 ஏக்கர் நிலம் எடுக்கப்படுகிறது. கோவையிலுள்ள கட்டுமான பொறியாளர்களுடன் இத்திட்டம் குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது. கட்டடக் கழிவுகளை மாற்று பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும். கட்டடம் இடிக்கும் இடத்திற்கு சென்று சொந்த பொறுப்பில், கட்டட கழிவை எடுக்க வேண்டும். அல்லது, மாற்று பொருள் உற்பத்தி மையத்தில் கட்டடக் கழிவை ஒப்படைப்பதால், எடையளவுக்கு தகுந்தாற்போன்று கட்டணம் கொடுக்க வேண்டும். ''கட்டடக் கழிவில் இருந்து, ஜல்லி, மணல், சிமெண்ட் துகள்கள் பிரித்தெடுக்கப்படும். அவற்றை கொண்டு, ரெடி மிக்ஸ், ஹாலோபிளாக் மற்றும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கப்படும். அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்து மாநகராட்சி பயன்பாட்டுக்கு எடுக்கப்படும். மீதமிருந்தால், மக்கள் பயன்பாட்டிற்கு விற்கப்படும். திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பிறகு, விரைவில் செயல்வடிவம் கொடுக்கப்படும்,'' என்றார்.
Last Updated on Tuesday, 19 August 2014 06:11
 

பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள்

Print PDF

தினமணி            17.02.2014

பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள்

பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்படும் என்று, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

பெங்களூரு பைரசந்திரா வார்டில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது:

பெங்களூருவில் குப்பை பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது பொதுமக்களின் கடைமையாகும்.

குப்பைகளை சேகரித்து, அதை வகைப் பிரித்து குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குப்பைகளை போட வேண்டும். குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 198 வார்டுகளில் அறிவியல் ரீதியான திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.  மேயர் சத்தியநாராயணா பேசியது:

வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும். 198 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. அனந்த்குமார், எம்.எல்.ஏ. விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் நகராட்சி தலைவர் தலைமையில் பூமிபூஜை

Print PDF

தினத்தந்தி             14.02.2014

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் நகராட்சி தலைவர் தலைமையில் பூமிபூஜை

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது.

காய்கறி கழிவுகள்

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36–வது வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் மூலம் மண்புழு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காய் கறி, பழங்கள், மனித கழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி திட்ட மிட்டு உள்ளது. பொள்ளாச்சி யில் உள்ள திரு.வி.க. மார்க் கெட், காந்தி மார்க்கெட், தேர் நிலை மார்க்கெட் ஆகிய 3 பகுதி களில் இருந்தும் தினமும் 5 டன் மக்கும் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.

இந்த கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு (பயோ கியாஸ்) தயாரிக்க மாட்டு சந்தை அருகே 500 சென்ட் பரப் பளவில் இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. இதற் காக ரூ.1 கோடி அரசு மானியம் வழங்கி உள்ளது.

பூமிபூஜை

பொள்ளாச்சி காந்தி மார்க் கெட்டில் காய்கறிகழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு பூமிபூஜை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கமிஷனர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

இதில் என்ஜீனியர் ராஜா, கவுன்சிலர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

மின்சாரம் தயாரிக்க திட்டம்

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

மார்க்கெட்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் காய்கறி, பழக் கழிவுகளை கொண்டு, அதில் இருந்து கார்பன்–டை– ஆக் சைடை பிரித்து எடுக்கப் படுகிறது. அதன்பின்னர் கிடைக்கும் சுத்தமான மீத் தேனை எடுத்து ஜென ரேட்டர் இயக்கப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படு கிறது. இந்த பணிகளை 3 மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளது.

இதேபோன்று மனித கழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளது. இதற்காக பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் இடம் தேர்வு செய் யப்பட்டு உள்ளது. கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மின் சாரம் முழுவதும் நகராட்சி தேவைக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 


Page 2 of 66