Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அனைத்து வீடு, கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் கட்டாயம் திருச்சி மாநகரில் பணி துவங்கியது

Print PDF

தினகரன்              19.06.2013  

அனைத்து வீடு, கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் கட்டாயம் திருச்சி மாநகரில் பணி துவங்கியது

திருச்சி, : திருச்சி மாநகரில் உள்ள அனைத்து வீடு, கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் கட் டாயமாக்கப் பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் வசிக் கும் மக்களுக்கு வழக்கமாக 110 மில்லியன் லிட்டர் காவிரி குடிநீர் நாள்தோ றும் விநியோகம் செய்யப் படும். ஆனால் பருவமழை தவறியது,  நிலத் தடி நீர் மட்டம் குறைவு ஆகிய காரணங்களால் தற்போது காவிரியிலிருந்து போது மான அளவு குடிநீரை உறிஞ்ச முடிய வில்லை. எனவே தினமும் 90 மில் லியன் லிட்டர் குடிநீர் மட் டுமே சேகரிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாட்டால் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர்.எனவே இனி வரும் ஆண்டுகளில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருப்ப தற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 1.93 லட்சம் வீடுகள் உள்பட சுமார் 2 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண் டும் கட்டாயமாக அமல் படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதற்காக மாநகராட்சி மேயர் ஜெயா தலைமையில் பொது சுகாதாரத்துறை, பொறியாளர் பிரிவு, வரு வாய் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றுவோரை கொண்டு 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் நேற்று முதல் 65 வார்டுகளிலும் களப் பணியில் ஈடுபட தொடங்கி யுள்ளனர்.

இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறுகையில், இனிவரும் காலங்களில் குடிநீர் தட்டு ப்பாடு ஏற்படால் இருக்க வேண்டுமெனில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும்.

அதற்கு மாநகரில் உள்ள 1.93 லட்சம் வீடுகள் உள்பட சுமார் 2 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அவசி யம் ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட சர்வேயின்படி மாநகரில் 60 சதவீத கட்டிடங்களில் 2002&2003ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு முறை நன்றாக உள்ளது. 20 சதவீத கட்டி டங்களில் பராமரிப்பு பணி யும், 20 சதவீத கட்டிடங்க ளில் புதிதாக அமைக்கவும் வேண்டியுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள 20 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.

இவர்களும், மாநகராட்சி கட்டிட ஒப் பந்தாரர்களும் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய தொடங்கி விட் டனர். இது வரை மழைநீர் சேகரிப்பு முறை இல்லாத கட்டிடங் களில் பொது மக் கள் தாங்களா கவே அமைத்துக் கொள்ள லாம். இல்லை யெனில் மாநகராட்சி குழுவினர் அந்த பணியை மேற் கொள்வர். அதற்கான செலவை அந்த வீடுகளில் வசிப்போர் கொடுத்து விட வேண்டும். தென்மேற்கு பருவமழை தொடங்க உள் ளதால் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் மாநகரிலுள்ள 2 லட்சம் வீடு, கட்டிடங்க ளிலும் மழைநீர் சேகரிப்பு முறையை ஏற்படுத்துவதற் கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார். 

 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி               19.06.2013

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வேண்டுகோள்


நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது தொடர்பாக பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி பேசியதாவது:–

மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தையும், அதனால் உண்டாகும் நன்மைகளையும் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்கனவே 2002, 2003–ம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு அவை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

ஒரு சில கட்டமைப்புகள் புனரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவற்றை உடனடியாக வரும் பருவமழை காலத்தின்போது, சேமிப்பதற்கு ஏதுவாக புனரமைப்பு செய்யப்பட வேண்டும். புதிதாக அமைக்க வேண்டிய இடங்களில் உடனடியாக அமைத்திட வேண்டும். ஏனெனில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மாநகராட்சி பகுதியிலும் அதேநிலை நிலவுகிறது.

குடிநீர் ஆதாரம்

குடிநீர் வழங்குவது மாநகராட்சியின் கடமை. ஆனால் குடிநீர் ஆதாரத்தை உருவாக்குவது பொதுமக்களின் கடமை. மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வகையான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரிவு அலுவலகங்களிலும், கோட்ட அலுவலகங்களிலும் மாநகராட்சி மைய அலுவலகத்திலும் பொதுமக்கள் கேட்டு பயன்பெறலாம்.

நிலத்தடி நீர்மட்டம்

மேலும், இதற்கான எளிய முறைகளை கையாண்டு பொதுமக்கள் அனைவரும் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். எனவே அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வேண்டிய கட்டிடங்கள் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தனி அறிக்கையாக சமர்ப்பிக்க ஒவ்வொரு வார்டுகளிலும் பொறியாளர்கள், துப்புரவு ஆய்வர்கள் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள், வரிதண்டலர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு. இந்த குழுவானது அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுசெய்து மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், பழுதடைந்து உள்ள அமைப்புகளை புனரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து, தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்

Print PDF

தினகரன்                 18.06.2013 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி நகரில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும். ஒருமாதம் காலக்கெடு விடுக்கப்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவித்தனர்.

 பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று, மழைநீர் சேகரிப்பு குறித்த விளக்க கூட்டம் நடந்தது. இதற்கு நகர்மன்ற தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர் விஜயக்குமார் முன்னிலை வகித்தார். நகரமைப்பு அலுவலர் சவுந்தராஜன், கவுன்சிலர்கள் வசந்த், கண்ணன், திருநீலகண்டன் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம்,  மழைநீர்  சேகரிப்பு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

 நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டில் பருவமழை பொழிவு மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டில், இப்போதுதான் பருவமழை பொழிய ஆரம்பித்துள்ளது. இதைதொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் வண்ணம், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நகரில் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட 36வார்டுகளிலும் அடிக்குமாடி குடியிருப்பு, வணிகவளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிமென்ட் கான்கிரிட் கூரை கட்டிட பகுதிக்கான மழைநீர் சேகரிப்பு அமைப்பை அனைவரும் துவங்கப்பட வேண்டும்.  மழைநீர் சேமிப்பு அமைப்பினை ஏற்படுத்த வார்டுவாரியாக துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இன்னும், ஒரு மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை 100சதவீதம் முடிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு பகுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்‘ என்றார்.

 


Page 6 of 96