Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

ரூ.5 லட்சத்தில் மழைநீர் சேகரிப்புப் பணிகள்

Print PDF

தினமணி               15.06.2013

ரூ.5 லட்சத்தில் மழைநீர் சேகரிப்புப் பணிகள்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு திட்டப் பணிகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவத்திபுரம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மழைநீர் சேகரிப்பு மாதிரி கட்டடம் அமைத்தல், செய்யாறில் உள்ள சாலைப் பகுதிகள், பூங்கா, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை ரூ. 5 லட்சத்தில் மேற்கொள்வது, மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், கட்டட ஆய்வாளர் கே.சுரேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

திருநீர்மலை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி              14.06.2013

திருநீர்மலை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநீர்மலை ஜெயஸ்ரீ முத்துகுமாரசாமி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை திருநீர்மலை பேரூராட்சித் தலைவர் வி.கலைவாணி காமராஜ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, மனித வாழ்விற்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் நீர் உயிர்ஆதாரமாகத் திகழ்வதால் இயற்கை நமக்கு வான் மூலம் வழங்கும் மழைநீரை நாம் துளிகூட வீணாக்கக் கூடாது. அதை செல்வமாகக் கருதி சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்வது அவசியம் என்றார்.

பின்னர் பள்ளி மாணவர்கள் உயிர்த்துளியாய் வரும் மழைத்துளியை வீணாக்காமல் பூமியில் சேமிப்போம், நிலத்தடி நீர் உயர மழைநீர் சேமிப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் பொறித்த பதாகைகள் ஏந்தி, திருநீர்மலை பேரூராட்சியின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். திருநீர்மலை பேரூராட்சி செயல் அலுவலர் வி.பிரேமா, பேரூராட்சி உறுப்பினர்கள் பி.ஷர்மி, சண்முகம், வி.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பேரணியில் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 14 June 2013 06:12
 

அங்கீகாரம் இல்லாத 759 மனைப் பிரிவுகள்: ஆட்சியர்

Print PDF
தினமணி         07.06.2013

அங்கீகாரம் இல்லாத 759 மனைப் பிரிவுகள்: ஆட்சியர்


மதுரை மாவட்டத்தில், அங்கீகாரம் இல்லாத 759 மனைப் பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற மனைப் பிரிவுகளில் மனைகள் வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 நகர் ஊரமைப்பு சட்டம் 1971 மற்றும் தமிழ்நாடு ஊராட்சி கட்டட விதிகள் 1997 ஆகியவற்றின்படி, மதுரை உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிக்குள் அடங்கும் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதி ஆகியவற்றுக்கு மதுரை உள்ளூர் திட்டக் குழுமத்தால் மனைப் பிரிவுக்கான தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் திட்ட அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர்தான், மனைப் பிரிவில் அமையும் மனைகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

 இந்த மனைப் பிரிவில் பூங்கா, விளையாடுமிடம், திறவிடம் 10 சதவீதமும், சாலை வசதிகளுக்கு 25 சதவீதமும், கடைக்கு 1 சதவீதமும் பொதுமக்களின் வசதிக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், மதுரை மாவட்டத்தில் ஏராளமான மனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெறப்படவில்லை என புகார்கள் எழுந்தன.

 இதுதொடர்பாக கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், அங்கீகாரம் இல்லாத 759 மனைப் பிரிவுகள் இருப்பது கண்டறியப்பட்டு,    அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகள், மேலூர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் ஏராளமான அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடைபெற்று வருகிறது.

  இதில், சில இடங்களில் உள்ளாட்சி அமைப்பினர் வரம்பை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளனர்.   பொதுவாக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வணிகக் கட்டடமாக இருப்பின் 2,000-ம் சதுர அடிக்குள்ளும், குடியிருப்புக்கு 4,000 சதுர அடிக்குள்ளும் கட்டட வரைபட அனுமதி வழங்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அமைப்புகள் மூலம் அந்த குறிப்பிட்ட மனைக்கான அனுமதியும் வழங்க முடியும்.

 ஆனால், மனைப் பிரிவுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகாரம் வழங்க முடியாது.  முழுமையான மனைப் பிரிவு வரைபடம் தயாரித்து உரிய நன்னிலை வரி, வளர்ச்சிக் கட்டணம் செலுத்தி உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப ஒப்புதலுடன் உறுப்பினர் செயலரால் திட்ட அனுமதி வழங்கப்படும். செயலாணை மற்றும் வரைபடங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  பின்னர், உள்ளாட்சியில் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே, மனைகளை விற்பனை செய்ய வேண்டும். அப்படி, உள்ளாட்சி அமைப்புகளால் நேரடியாக வழங்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகள் அனுமதியற்றவையாகக் கருதப்படும். இந்த மனைகளை பதிவு செய்ய வேண்டாம் என பத்திரப் பதிவுத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

 பொதுமக்களும் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மனைகள் வாங்க வேண்டாம்.

 இப்படிப்பட்ட மனை பிரிவுகளிலுள்ள மனைகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்வசதி போன்றவை ஏற்படுத்தி தர இயலாது. இந்த மனைகளுக்கு பட்டாவும் வழங்கப்பட மாட்டாது.

 அனுமதியற்ற மனைப்பிரிவுகள் குறித்து பொதுமக்கள், மாவட்ட ஆட்சியருக்குச்ஹஸ்ரீங்க்ஷர்ர்ந்:ஜ்ஜ்ஜ்.ச்ஹஸ்ரீங்க்ஷர்ர்ந்.ஸ்ரீர்ம்ஸ்ரீர்ப்ப்ங்ஸ்ரீற்ர்ழ்ஙஹக்ன்ழ்ஹண் என்ற முகவரியிலோ, மதுரை உள்ளூர் திட்டக் குழுமம், மதுரை மாநகராட்சி அலுவலக வளாகம், அண்ணா மாளிகை 3-ம் தளம், தல்லாகுளம், மதுரை-2, என்ற முகவரியிலோ, தொலைபேசியில் 0452-2530544 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம். உ.ம்ஹண்ப் ஐஈ: ம்ப்ல்ஹ ஸ்ரீற்ஸ்ரீல்ஹ்ஹட்ர்ர்.ண்ய் என்ற முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம், எனத் தெரிவித்தார்.
 


Page 9 of 96