Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் ரூ.3.39 கோடியில் அடிப்படை வசதிகள்

Print PDF
தினமணி        22.04.2013

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் ரூ.3.39 கோடியில் அடிப்படை வசதிகள்


பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் ரூ.3.39 கோடியில் அடிப்படை வசதி செய்வதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இவற்றை, வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தார்.  அவர் பேசுகையில், கடந்த பட்ஜெட்டில் பெருந்துறை பேரூராட்சிக்கு ரூ.52 கோடியை பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக முதல்வர் ஒதுக்கினார். இத் திட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். பெருந்துறை பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக அனைத்து விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், தொகுதி செயலர் திங்களூர் எஸ்.கந்தசாமி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன் (எ) ராமசாமி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவர் ஜானகி குப்புசாமி, துணைத் தலைவர் கே.பி.எஸ்.மோகன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Last Updated on Tuesday, 23 April 2013 07:04
 

பவானியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணி

Print PDF
தினமணி        22.04.2013

பவானியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணி


பவானி நகராட்சிப் பகுதியில், ரூ.61.50 லட்சம் செலவில் படித்துறைகள், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பவானி மற்றும் காவிரி ஆறுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு 9 இடங்களில் ரூ.40.50 லட்சத்தில் படித்துறைகள், ரூ.11 லட்சத்தில் அந்தியூர்-மேட்டூர் பிரிவு, சங்கமேஸ்வரர் கோயில் முன்புறம் என இரு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கான நிதியை திருப்பூர் எம்.பி. சிவசாமி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இதையடுத்து, முடிக்கப்பட்ட பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட எம்.பி. சிவசாமி, உயர்கோபுர மின்விளக்கை இயக்கி வைத்தார்.

பவானி நகர்மன்றத் தலைவர் கே.சி.கருப்பணன் தலைமை வகித்தார். நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார்.

நகர்மன்ற துணைத் தலைவர் என்.ராஜேந்திரன், உறுப்பினர்கள் ஏ.சி.முத்துசாமி,  மோகன், குருமூர்த்தி, ஆண்டியப்பன், ராஜசேகர், வழக்குரைஞர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

பொதுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த முடிவு

Print PDF
தினமணி         28.03.2013

பொதுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த முடிவு


ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுóள்ளது.

ராணிப்பேட்டை நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர் ராமதாஸ் பேசும்போது, வேலூர் மாநகராட்சி, அரக்கோணம் நகராட்சி உள்ளிட்ட இடங்களில் மின்சார தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ராணிப்பேட்டை நகராட்சியிலும் அமைக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த தலைவர், மின்சார தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிதி பெற்று பணிகள் தொடங்கப்படும் என்றார்.

இதையடுத்து, தமிழக அரசு ஆணையின் படி ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட உள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொது உபயோக அடுக்கு மாடிக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, இந்த வசதிகளை கட்டட வரைபடத்தில் குறிப்பிட்டு அனுமதி பெறச் செய்வது, ஏற்கெனவே கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பொதுக் கட்டடங்களில் 180 நாள்களுக்குள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த கட்டட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 


Page 19 of 96