Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னையின் காற்றின் தரம் உயர்வு; மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Print PDF

தினமலர்        05.08.2021

சென்னையின் காற்றின் தரம் உயர்வு; மாசு கட்டுப்பாட்டு வாரியம்
 
Chennai, Air Quality, சென்னை, காற்று தரம்

சென்னை: சென்னை மாநகரில் கொரோனா 2வது அலையால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.

சென்னையில் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் காற்றின் தரமானது திருப்தி என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், கொரோனா 2வது அலையில், ஊரடங்கின் காரணமாக வாகனப் போக்குவரத்து குறைந்ததால், ஏப்ரல், மே மாதங்களில், கத்திவாக்கம், ராயபுரம், பெருங்குடி, கோயம்பேடு ஆகிய இடங்களில் காற்றின் தரமானது நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


latest tamil news
ஆனால், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் அதிக பயன்பாடு, ஜெனரேட்டர் எரிபொருள் பயன்பாடு, கட்டுமான வேலைகள் போன்ற காரணங்களால் காற்றின் தரமானது மீண்டும் குறைந்து வருகிறது. சென்னையில் உள்ள ஆலந்தூரில் அமைந்துள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவின்படி காற்றின் தரம் பி.எம்.2.5 என்ற மிதமான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.
Last Updated on Thursday, 05 August 2021 12:00
 

புதுச்சேரியில் பதிவு செய்யாத கேபிள் டிவி இணைப்புகள் துண்டிப்பு: நகராட்சி நடவடிக்கை

Print PDF
தினமணி          05.08.2021
 

புதுச்சேரியில் பதிவு செய்யாத கேபிள் டிவி இணைப்புகள் துண்டிப்பு: நகராட்சி நடவடிக்கை


puducherry

புதுச்சேரியில் பதிவு செய்யாத, கேளிக்கை வரி செலுத்தாத கேபிள்டிவி நிறுவன இணைப்புகளை துண்டித்து நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. 

புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் வீடுகளுக்கு கேபிள் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பு இணைப்பு வழங்கப்பட்டு, பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இதற்காக ரூ. 200 முதல் ரூ. 500 வரை மாதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு விதிகள்படி புதுச்சேரி நகராட்சியில் பதிவு செய்யாமலும், கேளிக்கை வரி செலுத்தாமலும் நீண்டகாலமாக தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பல கோடி ரூபாய் வரி செலுத்தாமல் நிலுவை உள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் பதிவு செய்யாமலும் கேளிக்கை வரி செலுத்தாமலும் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் சிவக்குமார் அண்மையில் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கேபிள் டிவி கேளிக்கை வரி செலுத்தாத, பதிவு செய்யாத கேபிள் ஆபரேட்டர்களின் இணைப்புகளை துண்டிக்கும் பணியை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

இதன்படி முதல் கட்டமாக ரூ. 1 கோடியே 2 லட்சம் அளவில் கேளிக்கை வரி நிலுவை வைத்துள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைப்புகளை துண்டித்து, அவர்கள் பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வகையில் 6 கேபிள் டிவி நிறுவனங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பதிவு செய்யாத, வரி செலுத்தாத கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

 தினத்தந்தி         04.08.2021

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் சென்னையில் நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு அதிகளவில் அளிக்கப்பட்டு வந்து நிலையில், மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 
 
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று எந்த மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவாக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 150 பேருக்கும், நேரடியாக வருபவர்கள் 250பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 2 of 3988