Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகர்ப்புற வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது தமிழகம்: வெங்கய்ய நாயுடு

Print PDF

தினமணி           07.04.2017

நகர்ப்புற வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது தமிழகம்: வெங்கய்ய நாயுடு

venkaiah naidu

புதுதில்லி: நகர்ப்புற வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று பேசிய போது அவர் கூறியதாவது: -  நாட்டிலே அதிகமாக 24,245 சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில்தான் உள்ளன.

சுய உதவிக் குழுக்கள் மூலம் உதவி புரிவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் 30,258 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

 

'அம்ருத்' வளர்ச்சித் திட்டம் தமிழகத்துக்கு ரூ.11,237 கோடி

Print PDF

தினமணி     07.04.2017

'அம்ருத்' வளர்ச்சித் திட்டம் தமிழகத்துக்கு ரூ.11,237 கோடி

'அம்ருத்' எனப்படும் நகர்ப்புற உருமாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான அடல் இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.11,237 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

நாடு முழுவதும் 'அம்ருத்' திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சுமார் 500 நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையொட்டி, கடந்த 2015-இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.50 ஆயிரம் கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டு அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நகரங்களில் நகர்ப்புறங்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அம்ருத் திட்டம் மூலம் மின்னாளுகை, நிதிச் சீர்திருத்தம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த திட்டம் வரையறுக்கப்பட்டது. இதன்படி இந்த நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தண்ணீர், கால்வாய் வசதிகள், கழிவு மேலாண்மை, சாலை வசதிகள் போன்றவை செய்யப்படும்.

இதையடுத்து, அம்ருத் திட்டத்தில் முதல் கட்டமாக தமிழகத்தில் 32 நகரங்களைச் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தப் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, அம்பத்தூர், திருப்பூர், ஆவடி, திருவொற்றியூர், தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர், பல்லாவரம், திண்டுக்கல், வேலூர், தாம்பரம், கடலூர், ஆலந்தூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருவண்ணாமலை, கும்பகோணம், ராஜபாளையம், கள்ளக்குறிச்சி, மாதவரம், புதுக்கோட்டை, ஓசூர், ஆம்பூர், காரைக்குடி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த நகரங்களில் மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தும் நோக்குடன் ரூ. 11,237 கோடி நிதியை வழங்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நிதி எவ்வாறு தமிழகத்துக்கு பயன்படும்? அதற்கான வழிமுறைகள் என்ன? திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவது எப்படி? போன்றவை குறித்து விரைவில் மாநிலத் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தும் என்று மத்திய அரசின் உயரதிகாரி தெரிவித்தார்.

Last Updated on Friday, 07 April 2017 06:35
 

ஆவாரம்பாளையம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: மாநகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு

Print PDF

தினகரன்           05.04.2017

ஆவாரம்பாளையம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: மாநகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு

 
கோவை: கோவை ஆவாரம்பாளையம் சாலையில் சேதமடைந்த குடிநீர் குழாய் நேற்று மாநகராட்சி ஊழியர்களால் சீரமைக்கப்பட்டது. கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் இருந்து ஆவாரம்பாளையம் பகுதிக்கு வழித்தடம் செல்கிறது. இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பில்லூர் குடிநீர் விநியோகத்திற்காக தரையில் சுமார் 6 அடி ஆழத்தில் சிறிய விட்டமுள்ள குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் புரானிகாலனி பிரிவு அருகே உள்ள தனியார் பள்ளியின் முன்புறம் உள்ள சாலையின் தரைப்பகுதியில் பதிக்கப்பட்டு இருந்த பில்லூர் குடிநீர் பகிர்மானக்குழாய் நேற்று முன்தினம் இரவு உடைந்தது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் போது உடைந்த பகிர்மானக்குழாய் வழியாக தண்ணீர் வழிந்தோடியது. இதனால் அந்த இடமே சேறும், சகதியுமானது. குழாய் உடைப்பு ஏற்பட்ட அந்த பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் பிரிவு பொறியாளர்கள் நேற்று சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை இந்த பணி நடந்தது. நேற்று இரவு பணிகள் முடிக்கப்பட்ட பின்னரே அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
 


Page 16 of 3988