குடிமை மேம்பாட்டு திட்டத்தில் வீடு கட்ட 108 பயனாளிகள் தேர்வு

Tuesday, 10 August 2010 06:21 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமலர் 10.08.2010

குடிமை மேம்பாட்டு திட்டத்தில் வீடு கட்ட 108 பயனாளிகள் தேர்வு

போடி: குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் மானிய வட்டியுடன் வீடு கட்டுவதற்கு 108 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கடன் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குறைந்தது 270 சதுரடிக்குள் இருக்கும் குடிசை வீடுகளுக்கு கட்டடம் கட்டும் வகையில்,1.60 லட்சம் ரூபாய் 4 சதவீத வட்டியில் கடனாக வழங்கப்படுகிறது. இதில் மொத்த வட்டியில் ஆண்டு கணக்கிட்டு 5 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு நகராட்சி பகுதியில் 300 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் முதல் கட்டமாக 108 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் விழா நகராட்சி கமிஷனர் சரவணகுமார் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேற்பார்வையாளர் ஜெயபாலன், முன்னோடி வங்கி மேற்பார்வையாளர் முருகபிரபு, இந்தியன் வங்கி மேலாளர் அகிலன், நகராட்சி துணைத்தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமணன் எம்.எல்.., குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறுவதற்கான உத்தரவை வழங்கினார். கனரா வங்கி, சென்ட்ரல் வங்கி அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.