ஆதிதிராவிடர் மக்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி அமைச்சர் கந்தசாமி ஆய்வு

Monday, 27 September 2010 05:59 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினகரன் 27.09.2010

ஆதிதிராவிடர் மக்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி அமைச்சர் கந்தசாமி ஆய்வு

புதுச்சேரி, செப். 27: புதுவை அரியூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரூ.8.28 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் 142 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணியை அமைச்சர் கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார்.

ஆதிதிராவிட மக்க ளின் மேம்பாட்டுக்காக வருடத்துக்கு 3ஆயிரம் வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் சுமார் 15ஆயிரம் வீடுகள் கட்ட ஆதிதிராவிட நலத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஜவகர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் மூலம் 17 இடங்களில் மொத்தம் 1660 குடியிருப்புகளும், புதுவை, காரைக்கால் பிராந்தியத்திலுள்ள கிராமப்பகுதிகளில் ஹட்கோ உதவியுடன் 19 இடங்களில் மொத்தம் 1340 குடியிருப்புகளும் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக அரியூர் பகுதியில் ரூ.8.28 கோடி செலவில் 142 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. சமையல் அறை, வரவேற்பறை, கழிவறை, மாடிப்படி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் முழுமை யாக மாதிரி வீடு ஒன்று கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 142 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை ஆய்வு செய்தார். குடியிருப்புகளை தரமானதாக கட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது ஏழுமலை எம்எல்ஏ, ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் அழகிரி, ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் மலர்க்கண்ணன், செயற்பொறியாளர் சுரேஷ்நாதன் மற்றும் ஊர்பிரமுகர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச் சர் கந்தசாமி கூறுகையில், ‘குடியிருப்புகள் உறுதியாகவும், தரமானதாகவும் கட்டிக்கொடுக்க ஆலோசனை வழங்கியுள்ளேன். கட்டு மான பணிகள் வருகிற ஜனவரி மாதத்துக்குள் முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்என்றார்.