ரூ.8.28 கோடியில் தாழ்த்தப்பட்டோருக்கு வீடு கட்டும் பணி: அமைச்சர் நேரில் ஆய்வு

Monday, 27 September 2010 10:50 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமணி 27.09.2010

ரூ.8.28 கோடியில் தாழ்த்தப்பட்டோருக்கு வீடு கட்டும் பணி: அமைச்சர் நேரில் ஆய்வு

புதுச்சேரி, செப். 26: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ.8.28 கோடியில் தாழ்த்தப்பட்டோருக்காக அரியூர் பகுதியில் வீடு கட்டும் பணியை, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

÷புதுச்சேரி ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 ஆயிரம் வீடுகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

÷இத்திட்டத்தின் கீழ், ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் மூலம் நகரப் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 17 இடங்களில் 1660 வீடுகளும், கிராமப் பகுதியில் ஹட்கோ நிதியுதவியுடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 1340 வீடுகளும் அமைக்கப்பட உள்ளது.

÷முதல் கட்டமாக ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் அரியூர் பகுதியில் 142 வீடுகள் ரூ.8.28 கோடி மதிப்பில் அமைப்பதற்கு கடந்த மே மாதம் பூமி பூஜை நடந்தது.

÷பின்னர் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. 142 வீடுகளும் தளம் அமைக்கப்பட்டு பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

÷ஒவ்வொரு வீடும் தெருவாசல் தாழ்வாரம், அனைத்து உபயோக வரவேற்பு அறை, சமையல் அறை, கழிவறை, மாடிப்படி ஆகியவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

÷ஏழுமலை எம்எல்ஏ, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் கே.டி.அழகிரி, ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கோ.மலர்கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ந.நரேஷ்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.