மேயர் முன்னிலையில் பிச்சைக்காரர்கள், மனநோயாளிகளை விரட்டி பிடித்த அதிகாரிகள்; தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

Friday, 15 October 2010 11:15 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

மாலை மலர் 15.10.2010

மேயர் முன்னிலையில் பிச்சைக்காரர்கள், மனநோயாளிகளை விரட்டி பிடித்த அதிகாரிகள்; தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

மேயர் முன்னிலையில் பிச்சைக்காரர்கள், மனநோயாளிகளை
 
 விரட்டி பிடித்த அதிகாரிகள்;
 
 தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

சென்னை, அக். 15- சென்னை நகரில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநோயாளிகளை பிடித்து பராமரிக்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் மாநகராட்சி தொடங்கியது. ஒரு மாதத்தில் நூற்றுக்கணக் கானவர்கள் பிடிபட்டனர். அவர்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மீண்டும் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநோயாளிகள் வேட்டையை தீவிரப்படுத்த மேயர் மா. சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார். அண்ணா சாலையில் மேயர் முன்னிலையில் 22 பேரை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வேனில் தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்- அமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவுரைப்படி சென்னையில் ரோட்டில் அலையும் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகளை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. 748 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்களில் 270 பேர் மன நோயாளிகள் இவற்றில் 170 பேர் பூரண குணம் அடைந்து ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கிறார்கள். 100 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. உறவினர்களிடம் 74 பேர்கள் ஒப்படைக்கப்பட்டனர். உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் 19 பேர்கள் சேர்க்கப்பட்டனர். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் 492 பேர் சேர்க்கப்பட்டனர். வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வந்து பிச்சையெடுத்த 15 நபர்களுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு, அவர்களின் உறவி னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று நோய் மருத்துவமனையில் தொடர்ந்து 20 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று சுகாதாரத்துறை சார்பில் சென்டரல் ரெயில் நிலையம் அருகிலும், எழும்பூர் ரெயில் நிலையம் அருகிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகிலும், அண்ணாசாலை சிக்னலிலும் 22 நபர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு, நன்றாக குளிக்க வைத்து சுத்தம் செய்யப்பட்டு, முடிதிருத்தம் செய்யப்பட்டு, புத்தாடை வழங்கப்படும்.

மேலும் அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு, தொற்றுநோய்களுக்கு சிகிச்சைக்கள் வழங்கப்படும். மன நோயாளிகள் கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட உள் ளனர். மேலும் ஆலயங்களிலும், பள்ளி வாசல்களிலும், தேவாலயங்களிலும் முக்கியமான நாட்களில் வீடுகளிலிருந்து வந்து பிச்சையெடுப்பவர்கள் மாநகராட்சி மூலம் எச்சரித்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப் படுவார்கள்.

மாநகராட்சி சார்பில் 2 ஆதரவற்றோர் இல்லங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தன், கூடுதல் சுகாதார அதிகாரி டாக்டர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.