மனநோயாளிகளை காப்பகத்தில் சேர்க்க நகராட்சி நடவடிக்கை

Wednesday, 01 August 2012 05:56 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமலர்      01.08.2012

மனநோயாளிகளை காப்பகத்தில் சேர்க்க நகராட்சி நடவடிக்கை

பெரியகுளம்:பெரியகுளம் பகுதியில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மனநல காப்பகத்தில் சேர்ப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் ஓ.ராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) சுப்பிரமணியன், துணைத்தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு:

கருப்பையா: ஏழு வார்டு குப்பைகளும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அள்ளப்படுகிறது.

தலைவர்: அந்தந்த வார்டு குப்பைகளை கொட்டுவதற்கு, பெரிய அளவில் பிளாஸ்டிக் டம்பர் பிளேசர் வைக்கப்பட உள்ளது.

ராஜாமுகமது: பெரியகுளம் பகுதியில் மனநோயாளிகள், மாடுகள், நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.

தலைவர்: பெரியகுளம் பகுதியில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை , காப்பகத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் போக்குவரத்து பாதிப்பை  ஏற்படுத்தும் மாடுகளை   பிடித்து,  உரியவர்களிடம்  அபராதம் வசூல் செய்யப்படும். நாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெரியகுளம்  நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் புதிதாக  தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள  வணிகவளாக   கடைகளுக்கு,   வியாபாரிகள்    சிலர்   சிண்டிகேட் அமைத்து குறைந்த வாடகையில் இருந்து வருகின்றனர்.நகராட்சி  தலைவர்   மட்டுமல்லாமல் கவுன்சிலர்கள்   அனைவரும்  ஒன்றாக   சேர்ந்து  வாடகையை    உயர்த்துவதற்கு    ஆதரவு கொடுத்தால் தான்  நகராட்சி வருவாய்  அதிகரிக்கும்,என்றார்.