பாலமேடு பேரூராட்சியில் ரூ.35 லட்சத்தில் பணிகள்

Tuesday, 01 October 2013 10:22 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமலர்            01.10.2013  

பாலமேடு பேரூராட்சியில் ரூ.35 லட்சத்தில் பணிகள்

பாலமேடு : பாலமேடு பேரூராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேடு, நோய் அபாயத்தை தவிர்க்க, தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ரூ.35 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பேரூராட்சியில் வலையபட்டி ரோடு, 1 மற்றும் 2வது வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லை. சாக்கடை கழிவுநீர் வெளியேற வடிகால் வசதிகள் இல்லை. பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக பேரூராட்சித் தலைவர் நாராயணசாமி, துணைத் தலைவர் சேகர், நிர்வாக அலுவலர் சண்முகம் அப்பகுதிகளை ஆய்வு செய்தனர். பேரூராட்சியின் அவசர கூட்டத்தை கூட்டி பொது நிதியில் இருந்து அடிப்படை வசதிகள் செய்ய தீர்மானித்தனர்.

அதன்படி 1 மற்றும் 2 வது வார்டுகளில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற ரூ.4.40 லட்சத்தில் கான்கிரீட் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேல்நிலை தொட்டி தண்ணீரை பயன்படுத்த தொட்டிகள், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பாலமேடு - முடுவார்பட்டி ரோட்டில் ரூ.31 லட்சத்தில் தார் போட முடிவு செய்தனர். இப்பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளன. வலையபட்டி ரோட்டில் முதியோர் காப்பகம் வரை வடிகால் பணி நடக்கிறது.