அன்னூர் பேரூராட்சி வளர்ச்சி பணிக்காக ரூ.1 கோடி நன்கொடை

Wednesday, 09 October 2013 12:03 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினகரன்             09.10.2013

அன்னூர் பேரூராட்சி வளர்ச்சி பணிக்காக ரூ.1 கோடி நன்கொடை

அன்னூர், : அன்னூர் பேரூராட்சி வளர்ச்சிப் பணிக்காக விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுக சாமி ரூ.1 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.

அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் செல்வ விநாயகர் கோயில் திடலில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் கிராமிய சேவைத் திட்டம் துவக்க விழா தாசில்தார் சம்பத் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் பச்சையப்பன் வரவேற்புரையாற்றினார். அன்னூர் ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மாள், அன்னூர் பேரூராட்சி தலைவர் ராணி, தாசபளஞ்சிக சங்க தலைவர் பொன்னுச்சாமி, ஊர் கவுண்டர் லோகநாதன், தேசிய சேவா சங்க தலைவர் சுராஜ்குருசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர் பூமணி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி கலந்து கொண்டு, உலக சமுதாய சேவா சங்கத்திற்கு சொக்கம்பாளையம் கிராம வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். மேலும் அன்னூர் பேரூராட்சி வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வழங்குவதாகவும் அறிவித்தார். அதை நமக்கு நாமே திட்டத்தில் சேர்த்து அதில் வரும் பங்களிப்புடன் அன்னூர் பேரூராட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் பேசுகையில் “சொக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களை கிராமிய சேவைத் திட்டம் தத்தெடுக்கிறது, தினசரி பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நோயற்ற வாழ்வு, அகத்தூய்மை, குடும்ப அமைதி, முதியோரை மதித்தல், பாதுகாத்தல், கர்ம யோக வாழ்க்கை நெறி, சமுதாய விழிப்புணர்வு, மனித நேயம், மத நல்லிணக்கம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் ஆரோக்கியமான அமைதி நிறைந்த கிராமமாக மாற்றப்படும், இத்திட்டத்தின் மூலம் இக்கிராம மக்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள்’’ என்றார்.

இத்திட்டத்தின் மூலம் சொக்கம்பாளையத்தில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் தத்தெடுக்கப்பட்டன. மண்டல செயலா ளர் ஹரிதாஸ் நன்றி தெரிவித்தார். விழாவில் அன்னூர் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயலாளர் திருவேங்கடம், பொரு ளாளார் சுந்தரம், ராஜேந்திரன், கங்காதரன், ராமசாமி, ஆசிரியர்கள் நஞ்சையன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.