நெய்யூர் பேரூராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Saturday, 25 January 2014 09:40 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினத்தந்தி             25.01.2014

நெய்யூர் பேரூராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

குளச்சல் அருகே நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள பிரின்ஸ் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி கொடுமுடியில் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ரேஷன் கடை கட்டிடமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் செம்பொன்விளை குளலிவிளையில் சிமெண்டு தளமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கு நெய்யூர் சிவ சக்தி விநாயகர் கோவில் அருகே கலையரங்கமும், ரூ.3 லட்சம் செலவில் முரசங்கோடு பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆலங்கோடு பகுதியில் சிமெண்டு தளமும், சரல்விளை சி.எஸ்.ஐ. சபை அருகே ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் தார்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடக்க விழா நடந்தது.

விழாவுக்கு நெய்யூர் பேரூராட்சி தலைவர் பால்சேகர் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர்கள் செல்வதாஸ், பென்டேவிட், வின்சென்ட், ஜோலின், மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிகளை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளாட்சன், சாமுவேல் சேகர், ரத்தினகுமார், முரசங்கோடு பங்குதந்தை ஜான்கென்னடி, ஞானதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.