ரூ.18 லட்சம் நிதியில் வளர்ச்சிப் பணிகள்: திண்டிவனம் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

Saturday, 01 February 2014 11:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி             01.02.2014

ரூ.18 லட்சம் நிதியில் வளர்ச்சிப் பணிகள்: திண்டிவனம் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கி, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டிவனம் நகர்மன்றக் கூட்டம், தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகர்மன்ற துணைத்தலைவர் ஏ.வி.முகமதுஹரிப் உள்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 6 வார்டுகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்க ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதியும், காட்ராம்பாக்கம் தலைமை நீரேற்று நிலையத்தில் உடைந்த இணைப்பு குழாய் சரி செய்ய ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதியும், வார்டு எண் 10-ல் வடிகால் வசதி அமைத்து தர ரூ.2 லட்சம் நிதியும், காவேரிப்பாக்கம் தொடக்கப்பள்ளி மராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.7 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது.

நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் தேவையான மின் வசதி, குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டது. கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.