ஆதம்பாக்கம், ஆலந்தூர் 100 கடைகளில் சுகாதார அதிகாரிகள் சோதனை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Tuesday, 28 July 2009 12:33 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

மாலை மலர் 28.07.2009

ஆதம்பாக்கம், ஆலந்தூர் 100 கடைகளில் சுகாதார அதிகாரிகள் சோதனை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆலந்தூர், ஜூலை. 28-

ஆதம்பாக்கம், ஆலந்தூரில் 100 கடைகளில் சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மார்ச் 1-ந்தேதி முதல் தடை இருந்தது.

ஆனாலும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து இன்று சுகாதார அதிகாரிகள் ஆதம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் உள்ள கடை களில் சோதனை நடத் தினர். 100 கடைகளில் இந்த சோதனை நடந்தது. அங்கிருந்த பிளாஸ்டிக் கவர் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல தரமற்ற குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக கூறி குடிநீர் கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையால் அந்த பகுதிகளில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.