திருப்பூரில் ஆக.23-ல் 50 ஆயிரம் மரம் நடும் திட்டம்

Thursday, 20 August 2009 08:30 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி 20.08.2009

திருப்பூரில் ஆக.23-ல் 50 ஆயிரம் மரம் நடும் திட்டம்

திருப்பூர், ஆக.19: பசுமை இயக்கம் சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை பசுமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆக.23ல் நடக்கும் இதன் தொடக்க நிகழ்சியில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் பங்கேற்று முதல் மரக்கன்றை நட்டுவைக்க உள்ளார்.

ஈசா அறக்கட்டளையின் "பசுமைக்கரங்கள் திட்டம்' மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்த தமிழகம் முழுவதும் 11.4 கோடி மரங்களை நட திட்டமிடப்பட்டு இதுவரை 71 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது தமிழகத் தில் பல்வேறு நகரங்கள் தொழில்மயமாகியுள்ளதால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் மறுபுறம் சுற்றுச் சூழல் சீர்கெட்டு வருகிறது.

இதை தடுக்க நகரங்களை மையப்படுத்தி மரங்கள் நட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இத் திட்டத்தின் "பசுமை திருப்பூர் இயக்கம்' மூலம் திருப் பூர் மாநகரில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டப் பட்டுள்ளது.

திருப்பூர் டவுன்ஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடக்கும் இதன் தொடக்க விழாவில் தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் பங்கேற்று முதல் மரக்கன்றை நட்டுவைக்க உள்ளார். தொடர்ந்து அன்று முழுவதும் ஈசா அறக்கட்டளையினர் மாநகர் முழுவதும் 25 ஆயிரம் மரக் கன்றுகள் நட்டு வைக்க உள்ளனர்.

அதன்தொடர்ச்சியாக பசுமை மாரத்தன் ஓட்டம் டவுன் ஹால் முதல் பழைய பஸ்நிலையம் வரை நடக்கிறது. இந்த ஓட்டத்தில் நடிகை ஸ்ரேயா, நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்க உள்ளனர். மாலை நடக்கும் நிறைவு விழாவில் ஈசா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு. ஜக்கிவாசுதேவ் சிறப்புரையாற்ற உள்ளார்.

இதுகுறித்து பசுமைக்கரங்கள் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எத்திராஜலு செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக நகரங்களை பசுமையாக்கும் திட்டத்தில் முதலாவதாக திருப்பூர் மாநகரில் 25 ஆயிரம் மரக் கன்றுகள் நட்டு 3 வருடத்துக்கு பராமரிக்கும் பொறுப் பை ஈசா அறக்கட்டளை ஏற்றுக்கொண்டுள்ளது.

இத் திட்டத்தின் மூலம் வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நொய்யல் ஆற்றங்கரை, தெருக்கள், சாலையோரங்கள் மற்றும் இதர பாதுகாக்கப்பட்ட இடங்களில் தரமான பூ, நிழல் தரும் மரங்களும் நடப்படும்.

தொடர்ந்து சுமார் 5 மாதத்துக்குள் திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு ஒரு பசுமைவளையம் ஏற்படுத்தப்படும் என்றார்.