தேனியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Saturday, 01 February 2014 10:42 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினகரன்             01.02.2014

தேனியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தேனி, : தேனியில் நகராட்சி ஆணையர் தலை மையில் நடந்த ஆய்வில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் திடீரென பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பாலித்தீன் பைகள் உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் தேனி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று தேனி-அல்லிநகரம் நக ராட்சி ஆணையர் ராஜா ராம் தலைமையில் சுகாதார அலுவலர் சுருளிநாதன், சுகாதார ஆய்வாளர்கள் சுருளியப்பன், மணிகண்டன் ஆகியோர் தேனி கடற்கடை நாடார் சந்து, தேனி நகர் மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் உள்ள பழக்கடைகள், பேன்சி கடைகள், மொத்த வியாபார கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் கடற்கரை நாடார் தெருவில் இருந்த மொத்த வியாபார கடைகளில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனை செய்ததற்காக 3 மொத்த வியாபாரிகளுக்கு தலா ரூ.500 வீதமும், ஒரு சில்லரை வியாபாரிக்கு ரூ.100 என மொத்தம் ரூ.1600 அபராதம் வசூலிக்கப்பட்டது.