புதிய மீன் மார்க்கெட் இன்று முதல் முழுமையாக இயங்கும்

Saturday, 01 February 2014 10:54 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமணி             01.02.2014

புதிய மீன் மார்க்கெட் இன்று முதல் முழுமையாக இயங்கும்

வேலூர் மக்கான் அருகே அமைந்துள்ள புதிய மீன்மார்கெட்டில் உள்ள கடைகள் பிப்ரவரி 1 முதல் முழுமையாக இயங்கும். பழைய மீன்மார்க்கெட் வெள்ளிக்கிழமையுடன் மூடப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் மீன்மார்க்கெட் வியாபாரிகள் பழைய மீன் மார்க்கெட்டில் இருந்த தளவாடங்களை வெள்ளிக்கிழமை அகற்றி புதிய இடத்துக்கு கொண்டு சென்றனர். இஸ்லாமிய மத வழக்கப்படி கடைகள் திறப்புக்கான பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் மீன்மார்க்கெட் புதிய இடத்தில் முழுமையாக செயல்படவுள்ளது.