பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை அமைக்க நகராட்சி தீர்மானம்

Saturday, 01 February 2014 11:09 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமலர்             01.02.2014

பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை அமைக்க நகராட்சி தீர்மானம்

துறையூர்: துறையூர் நகராட்சி கூட்டம் தலைவர் முரளி, தி.மு.க., தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் திவ்யா அ.தி.மு.க., இன்ஜினியர் ரவி ச்சந்திரன், கவுன்சிலர்கள்பங்கேற்றனர். கூட்டத்தில் துறையூர் பஸ்ஸ்டாண்டில், 40 ஆண்டு பழமையான மேற்கூரை தம்மம்பட்டி, பெரம்பலூர் பஸ் நிற்கும் வடபுறமும், திருச்சி, நாமக்கல் பஸ் நிற்கும் தென்புறமும், இருந்த மேற்கூரை கீழே விழுந்து இரண்டு ஆண்டு ஆகிறது. மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டனர். மேற்கூரை அமைக்க பலமுறை வலியுறுத்தியும், இதுவரை அமைக்கப்படாமல் இருந்தது.

பஸ்ஸ்டாண்டில் கழிவறை, பயணிகள் ஓய்வறை, தரைகள், கழிவு நீர்கால்வாய் பழுதாகி அனைத்தும் புதுப்பிக்க, 77 லட்ச ரூபாய் திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பி மூன்று ஆண்டாகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. தற்போது மேற்கூரை புதிதாக அமைக்க, 20 லட்ச ரூபாய் திட்ட நிதி வந்துள்ளது. இதில் பணிகள் செய்வது உட்பட அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.