20 ஆண்டுகளாக வரி கட்டாதவர்கள் 20 ஆயிரம் பேர்

Friday, 07 February 2014 07:53 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமலர்              07.02.2014  

20 ஆண்டுகளாக வரி கட்டாதவர்கள் 20 ஆயிரம் பேர்

ஆலந்தூர் : ஆலந்தூர் மண்டலத்தில், கடந்த, 20 ஆண்டுகளாக, கழிவுநீர் மற்றும் குடிநீர் வரிகட்டாத, 20 ஆயிரம் பேர் உள்ளிட்ட 37 ஆயிரம் பேருக்கு, குடிநீர் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட, 156 முதல், 167 வரையிலான வார்டுகளில், 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகளும், 33 ஆயிரம் கழிவு நீர் இணைப்புகளும் உள்ளன.

156 முதல், 159 வரையிலான வார்டுகள், ஊராட்சி மற்றும் பேரூராட்சியாக இருந்தவை என்பதால், அங்கு கழிவு நீர் இணைப்பு இல்லை. தற்போது, மாநகராட்சி சார்பில், 159வது வார்டில், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வசூலிக்க முடிவு இந்த நிலையில், 160 முதல், 167 வரையிலான வார்டுகளில் உள்ள, 37 ஆயிரம் பேர், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி கட்டாமல், நிலுவை தொகையை பாக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, குடிநீர் வாரியம், நிலுவை தொகையை வசூலிக்க முடிவு செய்து, கடந்த சில தினங்களுக்கு முன், 37 ஆயிரம் பேருக்கும் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 1993ம் ஆண்டு முதல், வரி கட்டாமல் குடிநீர், கழிவுநீர் வசதி பெற்றவர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். 5 கோடி ரூபாய் இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாய் வரி வரவேண்டும்.

ஆனால், இரண்டு கோடி ரூபாய் கூட வசூலாகவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்த போது, 37 ஆயிரம் பேர் வரி கட்டாமல் இருந்தது தெரிந்தது. தற்போது, அவர்களுக்கு, அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அவர்களுக்காக, 163, 164, 166, 167வது வார்டு மற்றும் மண்டல அலுவலகத்தில் சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வரி கட்ட தவறினால், குடிநீர் வாரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.