காலியிடங்களில் புதர் இருந்தால் மாநகராட்சி அகற்றும்: மேயர்

Monday, 03 February 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமணி               03.02.2014

காலியிடங்களில் புதர் இருந்தால் மாநகராட்சி அகற்றும்: மேயர்

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள காலியிடங்களில் புதர்கள் இருந்தால், அவற்றை மாநகராட்சியே அகற்றும் என மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடர்பாக மாமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் செ.ம. வேலுசாமியின் பதில்:

குடியிருப்புகள் உருவாகும்போது வீட்டு மனையைப் பலர் வாங்குகின்றனர். ஒரு சில இடங்களில் வீடுகள் கட்டிக் குடியேறுகின்றனர். அவ்வாறு குடியேறும்போது பல இடங்களில் 4 வீடுகளுக்கு நடுவில் காலியிடம் உள்ளது.

அந்தக் காலியிடத்தில் புதர்கள் உருவாகின்றன. இதனால் அதில் பாம்பு உள்ளிட்டவை குடியேறுகின்றன. இதனால் வீடுகளில் குடியிருப்போருக்குத் தொல்லைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு காலியாக இருக்கும் இடத்தின் உரிமையாளர்களுக்கு முதலில் மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் அனுப்பலாம். புதர்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர் அகற்றாவிட்டால் மாநகராட்சியே அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

சம்பந்தப்பட்ட காலியிடத்தின் உரிமையாளர்கள் கட்டடம் கட்டுவதற்கு மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கும்போது, புதர்களை அகற்றியதற்கான கட்டணத்தையும் சேர்த்து வசூலிக்கலாம் என்றார் மேயர்.